நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம்! சிவசேனா மனுமீது உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறி உள்ளது.

மகாராஷ்டிரா மாநில ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ்தாக்கரே அரசு நாளை (30ந்தேதி) மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு தடை கேட்டு சிவசேனா தரப்பில் உச் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது இன்று காரசார விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இரவு 9மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தனது பெரும்பான்மை ஆதரவை ஜூன் 30-ஆம் தேதி சட்டசபை யில் நிரூபிக்க உத்தரவிட்டதை எதிர்த்து சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்த மனு மீது இன்று மாலை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து, மாநில அரசு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சியான பாஜக ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியது. இதையடுத்து, 30ந்தேதி மாலை 5மணிக்கு  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நாளை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.

ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சிவசேனா சார்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி கூறுகையில் ‘‘நாளை நம்பிக்கை வாக்கெடுப் புக்கு உத்தரவிடுவதில் ஆளுநர் சூப்பர்சோனிக் வேகத்தில் செயல்படுகிறார். 2என்சிபி எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநாட்டில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் அவசர கதியில் ஏன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியதுடன்,  34 எம்எல்ஏக்கள் பிரிந்து செல்லவில்லை என்றார்.

மேலும், நம்பிக்கை வாகெடுப்பில் யார் வாக்களிக்க முடியும், முடியாது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. மேலும் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி விட்டால் குறிப்பிட்ட நபரை சட்டப்பேரவை உறுப்பினராக கருத முடியாது. தகுதிநீக்க நோட்டீஸ் நிலுவையில் இருக்கும் போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எப்படி வாக்களிக்க முடியும் என்றும்  கேள்வி எழுப்பியவர்,  நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் தகுதி நீக்க நடவடிக்கைக்கு அனுமதி தேவை.

நாளைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றால் முதலில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும்’ எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 34 எம்எல்ஏக்கள் பிரிந்து செல்லவில்லை என்று நீங்கள் மறுக்கிறீர்களா என கேள்வி எழுப்பியது. தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டீஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படி பாதிக்கும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நிலுவையில் உள்ள தகுதி நீக்க நோட்டீஸ் வழக்கிற்கும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் என்ன சம்பந்தம் எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. இதையடுத்து, விசாரணை  நாளையும் தொடரும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து,  சிவசேனாவின் கிளர்ச்சி எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் வாதங்களைத் தொடங்கினார். அப்போது, சுப்ரீம் கோர்ட் இவ்வளவு காலதாமதமாக இருக்கும் போதெல்லாம், புளோர்  (பெரும்பான்மை நிரூபித்தல்)  சோதனையை நிறுத்துவது இல்லை, புளோர் டெஸ்ட் அறிவிக்கப்பட்டபடி  நடத்த வேண்டும் என்று  கூறியவர், புளோர் டெஸ்டை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், இது (புளோர் சோதனை) ஆளுநரின் விருப்பத்திற்காக செதுக்கப்பட்ட பகுதி. ஆளுநரின் முடிவு மிகவும் பகுத்தறிவற்றதாகவோ அல்லது நேர்மையற்றதாகவோ இருந்தால், அதில் தலையிட முடியாது. முதல்வர் ஃப்ளோர் டெஸ்டைச் சந்திக்கத் தயங்குவது முதல் பார்வையில் அவர் பெரும்பான்மையை இழந்ததாகக் கருதுவதாகக் கூறுகிறார். அரசியல் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதே ஃப்ளோர் டெஸ்டின் அடிப்படை நோக்கமாகும். கிளர்ச்சி எம்எல்ஏக்கள் சிவசேனாவை விட்டு விலகவில்லை. நாங்கள்தான் சிவசேனா, எங்களிடம் பெரும்பான்மை உள்ளது என்று வாதாடினார்.

இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநருக்காக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை தொடங்கினார். முதலில், சபாநாயகரை இந்த நீதிமன்றம் இடை நிறுத்தியுள்ளது என்ற வாதம் தவறானது, இந்த உத்தரவு அல்ல, சட்டமே அவரை இடைநிறுத்தியுள்ளது.  தொடர்ந்து பேசியவர், சஞ்சய் ராவுத்தின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி வாதாடினார் ( சஞ்சய் ராவத்தின் வன்முறை தொடர்பான பேட்டி, அச்சுறுத்தல்கள்)

மேலும், தரை சோதனை எந்த காலதாமதத்தையும் தடுக்க முடியாது என்றவர், புளோர் டெஸ்டுக்கு அவர் உத்தரவிட்டதன் மூலம், அவர் திருப்தி அடைந்தார் என்றும் கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில்,  இன்று இரவு 9 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான உத்தரவை பெஞ்ச் அறிவிக்கும் என கூறி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உச்சநீதி அமர்வு மீண்டும் இரவு 9மணிக்கு கூடி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நாளை நடக்கும் புளோர் டெஸ்ட்டுக்கு நாங்கள் தடை விதிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.

சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபுவின் மனு மீது உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது மேலும் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பு தற்போதைய மனுவின் முடிவுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அவரது மனுவை ஜூலை 11-ம் தேதி விசாரிக்கும் என தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சிறையில் உள்ள என்சிபி தலைவர்கள் நவாப் மாலிக் மற்றும் அனில் தேஷ்முக் ஆகியோர் நாளை நம்பிக்கை வாக்களிக்க அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் இப்போது விசாரித்து வருகிறது.

காராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள், அசாமில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் இன்று மும்பை திரும்பியுள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.