இந்திய முதலீட்டுச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி பல மாதங்களாக விசாரித்து வரும் என்எஸ்ஈ கோ லொகேஷன் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளுக்கும், என்எஸ்ஈ அமைப்புக்கும் 7 கோடி ரூபாய் வரையில் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.
என்எஸ்ஈ வழக்கு விசாரணை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் வேளையில் செபி-யின் உத்தரவு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
அரபிந்தோ பார்மாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள செபி.. ஏன்.. எதற்காக?
Dark Fibre வழக்கு
தேசிய பங்குச்சந்தை -யின் Dark Fibre வழக்கில் முக்கியக் குற்றவாளி என அறியப்படும் சித்ரா ராமகிருஷ்ணா-வுக்கு உட்படப் பலருக்கு செபி பல கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது. என்எஸ்ஈ Dark Fibre வழக்கை என்எஸ்ஈ கோ லொகேஷன் எனவும் அழைக்கப்படுகிறது.
5 கோடி ரூபாய் அபராதம்
செபி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் என்எஸ்ஈ-க்கு 7 கோடி ரூபாய் அபராதமும், தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனரான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் குழும இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு தலா 5 கோடி ரூபாய் தொகையை அபராதமாக விதித்துள்ளது.
6 கோடி ரூபாய் அபராதம்
இதுமட்டும் அல்லாமல் இண்டர்நெட் சேவை நிறுவனமான சம்பார்க் இன்ஃபோடெயின்மென்ட்-க்கு 3 கோடி ரூபாய் அபராதமும் மற்றும் பங்குத் தரகர் வே2வெல் தரகர்களுக்கு 6 கோடி ரூபாய் அளவிலான அபராதமும் விதித்துள்ளது.
45 நாள் கெடு
இந்த அபராத தொகையைச் செபி உத்தரவும் வெளியான 45 நாட்களுக்குள் டிமாண்ட் டிராப்ட் ஆகச் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் கைது அல்லது ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கோ-லொகேஷன் வழக்கு
NSE கோ-லொகேஷன் வழக்கு என்பது என்எஸ்ஈ அமைப்பில் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் தலைமை பொறுப்பில் இருந்த போது விதிமுறைகளை மீறி, என்எஸ்ஈ சர்வர்களின் ஆக்சஸ்-ஐ முறைகேடாக என்எஸ்ஈ-யின் கோ லொகேஷன் சேவையைப் பயன்படுத்தி வெளியாட்களுக்குப் பகிரப்பட்டது தொடர்பானது.
வசதிகள், மோசடிகள்
இந்த ஆக்சஸ் சந்தையில் வர்த்தகம் செய்யும் அனைத்து முதலீட்டாளர்களுக்கு முன்பாகவே வர்த்தகத் தரவுகளைப் பார்க்க முடியும். இந்த வழக்கில் தான் தற்போது சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன், சம்பார்க் இன்ஃபோடெயின்மென்ட், வே2வெல் தரகு நிறுவனங்கள் சிக்கி அபராதம் பெற்றுள்ளது.
SEBI imposes Rs 7 cr penalty on NSE, Rs 5 cr on Chitra Ramakrishna and Anand Subramanian in co-location case
SEBI imposes Rs 7 cr penalty on NSE, Rs 5 cr on Chitra Ramakrishna and Anand Subramanian in co-location case NSE-க்கு 7.. சித்ரா ராமகிருஷ்ணா-வுக்கு 5.. செபி போட்ட தடாலடி அபராதம்..! #DarkFiber