தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரித்ததுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து உள்ளது.

கடந்த 21 ஆம் திகதி தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 366 ஆக இருந்தது. நேற்று கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 970 ஆக இருந்தது. இதன் மூலம் ஒரே வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றானது பணியிடங்களில்18 சதவீத பேரும், பயணத்தின் போது 16 சதவீத பேரும், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் அல்லது பயிற்சி நிலையங்களில் 12 சதவீத பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரிப்புக்கு பி.ஏ.5 மற்றும் பி.ஏ.2.38 ஆகிய துணை வகை வைரசுகள் பரவுவதும், பொதுமக்கள் முக கவசத்தை அணியாதிருப்பதும், சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காததும் காரணம். எனவே பொது இடங்களில் மக்கள் முக கவசத்தை கட்டாயம் அணிந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடை பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.