குரங்கு அம்மை நோயை தடுக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயன்படுத்த வேண்டும் – தென்னாப்பிரிக்கா சுகாதார அமைச்சகம்

ஜோகன்னஸ்பர்க்,

குரங்கு காய்ச்சலை தடுக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயன்படுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்கா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அந்நாட்டின் மேற்கு மாகாணத்தில் உள்ள கேப் டவுண் பகுதியில் வெளிநாட்டிற்கு செல்லாத ஒருவருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது.

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க சுகாரதார அமைச்சர் ஜோ பாஹ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை பரவுவதை தடுப்பது தொடர்பாக பயண கட்டுப்பாடுகள் விதிக்க பரிந்துரைக்கவில்லை என்றாலும் உள்ளூர் நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு குரங்கு அம்மை வழக்குகளை கண்டறிதல் மற்றும் அவற்றை மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டுதலை வழங்குகின்றன.

கொரோனா தொற்று பரவலின் போது விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் பல அடுக்குகளில் சோதனை செய்தனர். இதில் பயணிகளின் வெப்பநிலையை பரிசோதித்தல், பயணிகளின் உடல்நிலை குறித்த கேள்விதாள்களை நிரப்புதல், அவற்றை பகுப்பாய்வு செய்தனர். இதன்மூலம் தொற்று பரவலை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்க உதவியது.

சர்வதேச சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப நோய் தொற்று பரவுவதை தொடர்ந்து கண்காணிக்க சுகாதாரத் துறை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.

சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும்,நோய் அறிகுறிகள் உள்ளதாக சந்தேகம் இருந்தால் மாதிரி எடுத்து பரிசோதனை செய்வார்கள். குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் இருந்தால் சுகாதார நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும், இதன்மூலம் விரைவான சிகிச்சை அளிக்கலாம் என அவர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.