பிரபல இந்திய ஹாக்கி ஜாம்பவான் வரீந்தர் சிங் காலமானார்..!!

முன்னாள் வீரரான வரீந்தர் சிங் 1972-ம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்ற ஒலிம்பிக் அணியில் அங்கம் வகித்துள்ளார். இதே போல் 1975-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் வரீந்தர் சிங் முக்கிய வீரராக இருந்தார்.

varinder-singh

1973-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும் வரீந்தர் சிங் இந்திய ஆக்கி அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தார். இது மட்டுமல்லாமல் 1974 மற்றும் 1978-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

இவருக்கு 2007-ம் ஆண்டு மதிப்புமிக்க தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவிற்கு ஹாக்கி இந்தியா அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த செய்தியில், “வரீந்தர் சிங்கின் சாதனைகள் உலகெங்கிலும் உள்ள ஹாக்கி சகோதரத்துவத்தால் நினைவுகூரப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.