எலும்பு வலிமை, சர்க்கரையை கட்டுப்படுத்தும் ராகி சிமிலி… சிம்பிள் ஸ்டெப்ஸ் பாருங்க!

Ragi Simili Recipe in Tamil: ராகி அல்லது கேப்பை அல்லது கேழ்வரகு தென்னிந்தியாவில் மிக முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. இந்த அற்புத தானியத்தில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. இவற்றில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

கேழ்வரகில் உள்ள அமினோ அமிலங்கள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இவை சரும ஆரோக்கியம், எலும்புகளின் வலிமை, முடி வளர்ச்சி போன்றவற்றுக்கும் பயன்படுகின்றன.

இப்படியாக ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கேழ்வரகில் பாரம்பரிய சுவையுடன் ‘ராகி சிமிலி’ எப்படி செய்வது தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

ராகி சிமிலி தயார் செய்யத் தேவையானப் பொருட்கள்:-

கேழ்வரகு மாவு – 200 கிராம்
வெல்லம் – 100 கிராம்
வேர்க்கடலை – 100 கிராம்
எள் – 4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
நெய் – தேவையான அளவு
உப்பு – ¼ தேக்கரண்டி

ராகி சிமிலி சிம்பிள் செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பின்னர் அவற்றில் நெய் ஊற்றி சப்பாத்திகளாக சுட்டுக்கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியில் எள் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கி பொடித்துக்கொள்ளவும்.

கேழ்வரகு சப்பாத்தி ஆறியதும் ஒரு மிக்சியில் போட்டு சற்று நொறுநொறுப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இவற்றுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் வெல்லம் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகப் பிசையவும்.

இந்த கலவை கையில் ஒட்டும் பதத்தில் வரும்போது உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான மற்றும் சத்தான ‘கேழ்வரகு சிமிலி’ ரெடி.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.