இந்திய ராணுவத்தில் இத்தனை பிரபலங்களா..?! யார் யார் இருக்காங்க பாருங்க!

இந்திய ராணுவத்தில் இணைந்து தாய் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருந்து வருகிறது.

மற்ற அனைத்து தொழிலை விட விளையாட்டு மற்றும் ராணுவம் ஆகிய இரண்டும் மனதுக்கு நெருக்கமாக உள்ள தொழிலாகும்.

அதிலும் விளையாட்டு வீரர்கள் இராணுவத்தில் உயர் பதவிகளை பெற்றுள்ளனர் என்பது ஆச்சரியமான தகவலாகும்.

பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைகளை கண்கானிக்க.. புதிய ட்ரோன்களை வாங்க “இந்திய ராணுவம்“ திட்டம்..

இந்திய ராணுவத்தில் பிரபலங்கள்

இந்திய ராணுவத்தில் பிரபலங்கள்

விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், நடிகர்கள் என பலருக்கும் இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் போன்ற பிரபலங்கள் தங்கள் துறையில் இந்தியாவை பெருமைப்படுத்துவது மட்டுமின்றி நாட்டிற்கும் சேவை செய்து வருவார்கள் என்பது ஆச்சரியமான தகவலாகும்.

பிரபலங்களின் பட்டியல்

பிரபலங்களின் பட்டியல்

இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் உயர் பதவியிலுள்ள பிரபலங்களின் பட்டியல் இதோ:

எம்எஸ் தோனி – லெப்டினன்ட் கர்னல்
சச்சின் டெண்டுல்கர் – இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன்
சச்சின் பைலட் – லெப்டினன்ட்
அபினவ் பிந்த்ரா – லெப்டினன்ட் கர்னல்
கபில் தேவ் – லெப்டினன்ட் கர்னல்
மில்கா சிங் – சிபாய் JCO
மோகன்லால் விஸ்வநாத் நாயர் – லெப்டினன்ட் கர்னல்
ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் – லெப்டினன்ட் கர்னல்
தீபக் ராவ் – மேஜர்
அனுராக் சிங் தாக்கூர் – பிராந்திய ராணுவத்தில் கேப்டன்

 

எம்எஸ் தோனி - லெப்டினன்ட் கர்னல்
 

எம்எஸ் தோனி – லெப்டினன்ட் கர்னல்

எம்எஸ் தோனியின் விளையாட்டு திறமை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. அபாரமான பேட்டிங், மின்னல் வேக ஸ்டம்பிங், ,மிகச்சிறந்த ஃபினிஷர் என இந்திய கிரிக்கெட் அணியின் பல வெற்றிகளுக்கு காரணமானவர். இந்த நிலையில் இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு லெப்டினன்ட் கர்னல் என்ற கெளரவ பதவி வழங்கப்பட்டது. இவர் ராணுவத்தில் பாராசூட் பயிற்சி பெற்றுள்ளார். இந்திய ராணுவத்தின் மற்ற வீரர்களுடன் கைப்பந்து விளையாடுவது, தனது காலணிகளுக்கு தானே பாலிஷ் செய்து கொள்வது ஆகியவை இவருக்கு ராணுவத்தில் கிடைத்த அனுபவங்கள். மேலும் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றி உள்ளார் என்பதும், நாட்டின் உயரிய விருதான பத்மபூஷன் விருது இவருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் - இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன்

சச்சின் டெண்டுல்கர் – இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன்

சச்சின் டெண்டுல்கருக்கு அறிமுகம் தேவையில்லை. இந்த தலைமுறையின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதை அனைவரும் அறிவோம். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமின்றி அவர் ஒரு ஒரு சிறந்த சிறந்த மனிதராகவும் அனைவரின் கண்முன் தெரிந்தார். கடந்த 1989ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 50 ஓவர்கள் கிரிக்கெட் முதல் டெஸ்ட் போட்டி வரை பல்வேறு சாதனைகள் செய்துள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு 2010ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் குரூப் கேப்டன் பதவி வழங்கி கெளரவிக்கப்பட்டது. கௌரவ விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர் மற்றும் விமான பின்னணி இல்லாத முதல் நபர் என்ற பெருமையையும் சச்சின் டெண்டுல்கர் பெற்றார்.

சச்சின் பைலட் - லெப்டினன்ட்

சச்சின் பைலட் – லெப்டினன்ட்

காங்கிரஸ் பிரமுகர் மற்றும் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல் அமைச்சர் சச்சின் பைலட் அவர்கள் பெங்களூரிலுள்ள சேவை தேர்வு வாரியத்தில் முறையாக பயிற்சி பெற்ற பிறகு ராணுவத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் முதலமைச்சர் என்ற பெருமை இவருக்கு உண்டு. எனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் ராணுவ்த்தில் இருந்ததால் எனக்கும் ராணுவத்தில் சேர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்றும் ராணுவ குடும்பத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று சச்சின் பைலட் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சச்சின் பைலட் அவர்களின் தந்தை இந்திய விமானப் படையில் போர் விமானியாக இருந்தார் என்பதும் அவரது தாத்தா இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபினவ் பிந்த்ரா - லெப்டினன்ட் கர்னல்

அபினவ் பிந்த்ரா – லெப்டினன்ட் கர்னல்

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவர் அபினவ் பிந்த்ரா என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே தங்கப்பதக்கத்தை கொண்டுவந்தவர் இவர்தான். 1980 ஆம் ஆண்டு ஆண்கள் ஹாக்கி அணி இந்தியாவிற்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை பெற்று கொடுத்ததை அடுத்து தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்காக பெற்றுக் கொடுத்தவர் அபினவ் பிந்த்ரா. அபினவ் பிந்த்ரா அவர்களுக்கு இந்தியாவின் ராணுவத்தில் கௌரவ லெப்டினென்ட் கர்னல் என்ற பதவி வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக இவருக்கு அர்ஜுனா விருது மற்றும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

 கபில் தேவ் - லெப்டினன்ட் கர்னல்

கபில் தேவ் – லெப்டினன்ட் கர்னல்

ஹரியானா சூறாவளி என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் என்றால் 1983 ஆம் ஆண்டு இந்தியா உலக கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் பெற்றது தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். குறிப்பாக ஜிம்பாவே அணிக்கு எதிராக அவர் 175 ரன்கள் எடுத்த சாதனை மிகப்பெரியதாகும். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அவர்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினண்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மில்கா சிங் - சிபாய் JCO

மில்கா சிங் – சிபாய் JCO

விளையாட்டு வீரர் மில்கா சிங் அவர்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது. நான்கு முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மில்கா கடந்த 1958ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். 1960ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் 400 மீட்டர் இறுதி போட்டியில் 4வது இடத்தைப் பெற்றார். இவருக்கு 1953 ஆம் ஆண்டு இந்திய ஆயுதப் படையில் சிபாய் JCO என்ற பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் விஸ்வநாத் நாயர் - லெப்டினன்ட் கர்னல்

மோகன்லால் விஸ்வநாத் நாயர் – லெப்டினன்ட் கர்னல்

300க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் மோகன்லால். 2018 ஆம் ஆண்டு அப்போதைய ராணுவ தளபதி தீபக் கபூர் என்பவரால் இவருக்கு லெப்டினன்ட் கர்னல் என்ற கெளரவ பதவி வழங்கப்பட்டது. இந்த கௌரவ பதவியை பெற்ற முதல் நடிகர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் - லெப்டினன்ட் கர்னல்

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் – லெப்டினன்ட் கர்னல்

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கடந்த 2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மற்றொரு விளையாட்டு வீரர். 1990ஆம் ஆண்டு இவருக்கு இராணுவத்தில் பதவி வழங்கப்பட்டது என்பதும் பின்னர் 1992 ஆம் ஆண்டில் லெப்டினன்ட் பதவி வழங்கப்பட்டது என்பதும் 2000ம் ஆண்டில் மேஜர் மற்றும் 2009 ஆம் ஆண்டில் கர்னல் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபக் ராவ் - மேஜர்

தீபக் ராவ் – மேஜர்

தீபக் ராவ் ஒரு விளையாட்டு வீரர் மட்டுமன்றி மருத்துவர், அரசியல்வாதி மற்றும் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011ம் ஆண்டு மகேந்திர சிங் தோனி மற்றும் அபினவ் ஆகியோருடன் இணைந்து இந்திய ராணுவத்தில் பிராண்ட் தூதர் என்ற பதவி பெற்றார். இவர் தனது 17 ஆண்டுகள் மேஜர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 அனுராக் சிங் தாக்கூர் - பிராந்திய ராணுவத்தில் கேப்டன்

அனுராக் சிங் தாக்கூர் – பிராந்திய ராணுவத்தில் கேப்டன்

ஹிமாச்சல பிரதேசத்தில் நான்கு முறை பாஜகவின் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட இவர் 2011 ஆம் ஆண்டு அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் எஸ் சுஹாக் டிஏ என்பவரால் பிராந்திய இராணுவத்தில் லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார். ராணுவத்தில் நியமனம் செய்யப்பட்ட முதல் எம்பி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

10 Famous Personalities in The Indian Army for Highly Designated Posts

10 Famous Personalities in The Indian Army for Highly Designated Posts | இந்திய ராணுவத்தில் இத்தனை பிரபலங்களா..?! யார் யார் இருக்காங்க பாருங்க!

Story first published: Thursday, June 30, 2022, 7:44 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.