பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். தலைநகர் பாட்னாவிலும், சீதாமாரி, மாதேபுரா, கிஷன்கஞ்ச் மாவட்டங்களிலும் கடும் மழைபெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது. இதே போல் சட்டிஸ்கரிலும் 3 பேர் மின்னல் தாக்கி பலியாகினர்.