பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மூலம் சம்பாதிக்க முடியும் என அனைவரும் அறிந்ததே.
ஆனால் Linkedin சமூக வலைதளம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி இளைஞர் சுதர்சனம் கணபதி நிரூபித்துள்ளார்.
தனிநபர்களின் Linkedin கணக்குகளை கையாள ‘தி சோசியல் கம்பெனி’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்தியர்களுக்கு இப்ப இதுதான் ரொம்ப பிடிச்சிருக்காம்..!
தி சோசியல் கம்பெனி
‘தி சோசியல் கம்பெனி’ நிறுவனத்தின் சுதர்சன் கணபதியின் சொந்த ஊர் தூத்துக்குடி. ஆனால் அதே நேரத்தில் படித்து வளர்ந்தது அனைத்துமே சென்னையில் தான். கணபதியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சென்னையில் தொழில் தொடங்கிய போது திடீரென எதிர்பாராத விதமாக இறந்து விட்டார். இதனை அடுத்து குடும்ப பொறுப்பு கணபதியின் தாயார் தலையில் விழுந்தது.
இன்ஜினியரிங் படிப்பு
அம்மா வேலை செய்து கணபதியையும் அவரது சகோதரரையும் படிக்க வைத்தார். இன்ஜினியரிங் படித்த கணபதிக்கு entrepreneurship பிரிவு மீது ஆர்வம் திரும்பியது. அவரது பேராசிரியர் சங்கர் கணேஷ் கொடுத்த ஊக்கம் காரணமாக சொந்த தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. டிசிஎஸ் உள்பட பல நிறுவனங்களில் வேலை கிடைத்தாலும் வேலைக்கு செல்ல அவருக்கு விருப்பம் இல்லை. இதனால் அவரது அம்மாவுக்கு அதிருப்தி என்றாலும் இரண்டு வருடங்களில் சொந்த தொழில் செய்து ஜெயித்து காட்டுகிறேன் என்று அம்மாவிடம் அவகாசம் பெற்றார்.
தி சோசியல் ஈகிள்
எம்.இ படித்து கொண்டே இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கையாளும் நிறுவனத்தைத் தொடங்கிய கணபதிக்கு முதலில் ஹோட்டல், சலூன், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் வாடிக்கையாளர்களாக கிடைத்தனர். அந்த நேரத்தில் இவரது சகோதரரும் வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதை அடுத்து இருவரும் சேர்ந்து ‘தி சோசியல் ஈகிள்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
கொரோனா பாதிப்பு
முதலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கவனித்துக்கொள்ளும் பணி செய்யப்பட்டது. இதில் ஓரளவு பிசினஸ் நன்றாக இருந்தது. வாடிக்கையாளர்களும் அதிகம் இணைந்தனர். ஆனால் திடீரென 2020ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக பல வாடிக்கையாளர்கள் தங்கள் சேவையை நிறுத்திக் கொண்டார்கள்.
Linkedin சமூக வலைத்தளம்
இருப்பினும் மனம் தளராத கணபதி மற்றும் அவரது சகோதரரின் கவனம் Linkedin பக்கம் திரும்பியது. புதிதாக ஒரு Linkedin ப்ரொஃபைல் தொடங்கி தீவிர முயற்சிக்குப் பிறகு 25,000 பாலோயர்கள் கிடைத்தனர். Linkedin பக்கத்தில் என்ன செய்யவேண்டும் என்பது மிக எளிதில் தெரியவந்தது. Linkedin பக்கத்தை எப்படி கையாள்வது என்பதையே ஒரு தொழிலாக மாற்றும் ஐடியா கிடைத்தது. இந்த ஐடியாவுக்கு வாடிக்கையாளர்களும் கிடைத்தனர்.
தனிநபர்களின் Linkedin பக்கங்கள்
நிறுவனங்களின் Linkedin பக்க்கங்களை கையாள்வதை விட தனிநபர்களின் Linkedin பக்கங்களை கையாள வேண்டும் என்ற முடிவை எடுத்தனர். இதனை அடுத்து கணபதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக தொழில்துறையில் உள்ள பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக சேர்ந்தனர்.
ஆர்கானிக் ரீச்
தங்களது வாடிக்கையாளர்களின் Linkedin பக்கங்களை புரோமோஷன் செய்ய வேண்டும், தகுதியான ஃபாலோயர்களை அதிகரிக்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களது பணி. குறிப்பாக Linkedin பக்கங்களுக்கு ஆர்கானிக் ரீச் என்பது முக்கியத்துவமாக கவனத்தில் கொள்ளப்பட்டது.
ஒரு லட்ச ரூபாய் கட்டணம்
மற்ற சமூக வலைதளங்களை விட Linkedin சமூக வலைத்தளத்தில் வாடிக்கையாளர்கள் குறைவு என்பதால் பணியும் சவாலாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் Linkedin பயனாளர்களின் சராசரி வருமானம் அதிகம் என்பதால் இந்த தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. ஒரு Linkedin பக்கத்தை 3 மாதங்கள் பராமரிப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் என கட்டணம் என சுதர்சன் கணபதி நிர்ணயம் செய்தார்.
வாடிக்கையாளர்கள்
ஒரு நிறுவனத்தின் தலைவர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தோற்றுவித்தவர்கள், நிறுவனங்களில் உயர்பதவியில் இருப்பவர்கள் என பலரும் தங்களது Linkedin பக்கத்தை புரமோஷன் செய்வதற்காக கணபதியிடம் வாடிக்கையாளர்களாக இணைந்தனர். வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தற்போது கணபதி திருப்தியான சேவையை செய்து வருகிறர். வித்தியாசமாக சிந்தித்து Linkedin மூலமும் சம்பாதிக்கலாம் என்ற ஐடியாவை ஏற்படுத்தி அதில் வெற்றியும் பெற்ற கணபதி தமிழகத்தை சேர்ந்த இளைஞர் என்பதில் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தான்.
Business from Linkedin and earn lakhs of rupees!
Linkedin மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியுமா? சாதித்து காட்டிய தூத்துகுடி இளைஞர்! | ஆனால் Linkedin சமூக வலைதளம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி இளைஞர் சுதர்சனம் கணபதி நிரூபித்துள்ளார். தனிநபர்களின் Linkedin கணக்குகளை கையாள தி சோசியல் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.