தமிழகத்தில் இருந்து வெளியேறும் நிறுவனத்திற்கு ரூ.5000 கோடி கடன் கொடுக்கிறதா எல்.ஐ.சி?

தமிழகத்தில் இருந்து வெளியேறும் வேதாந்தா குரூப் நிறுவனத்திற்கு எல்ஐசி 5000 கோடி ரூபாய் கடன் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையை விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

விரைவில் இந்நிறுவனம் வேறு நிறுவனத்திற்கு விற்கப்படவுள்ள நிலையில் இந்நிறுவனம் ரூ.5000 கோடி எல்.ஐ.சியிடம் கடன் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது வேற லெவல் கணிப்பு.. வேதாந்தா 20% லாபம் தரலாம்.. நல்ல சான்ஸ்..!

அதிக வட்டிக்கு கடன்

அதிக வட்டிக்கு கடன்

வேதாந்தா குழுமம் அதிக வட்டிக்கு வெளிநாட்டில் கடன் வாங்கியதால் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதை அடுத்து இடம் குறைந்த வட்டிக்கு ரூ.5000 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வேதாந்தா குழுமம்

வேதாந்தா குழுமம்

இந்தியாவின் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரான அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரும்புத் தாது, எஃகு, தாமிரம், அலுமினியம், கச்சா எண்ணெய், வெள்ளி மற்றும் எரிவாயு துறை சார்ந்த நிறுவனங்களை வேதாந்தா குழுமம் நடத்தி வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலை
 

ஸ்டெர்லைட் ஆலை

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தமிழக அரசின் தடை காரணமாக மூடப்பட்டது என்பதும் இதனை அடுத்து இந்த நிறுவனத்தை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை வேதாந்தா குழுமம் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு கடன்

வெளிநாட்டு கடன்

இந்த நிலையில் அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளில் அதிக வட்டிக்கு கடன் வாங்கியதால் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ள வேதாந்தா குழுமத்திற்கு தற்போது உள்ள பொருளாதார மந்த நிலையும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடும் பாதிப்பு

கடும் பாதிப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அமெரிக்க வங்கி வட்டி விகித உயர்வு, பண வீக்கம் போன்றவை வேதாந்தா நிறுவனத்தை கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில் கடன் கொடுத்த நிறுவனங்கள் கடன் தொகையை வசூலிப்பதற்காக நடவடிக்கையை எடுத்து வருவதை அடுத்து வேதாந்தா நிறுவனம் தற்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடனை அடைக்கும் முயற்சி

கடனை அடைக்கும் முயற்சி

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதன் காரணமாக வெளிநாட்டில் வாங்கிய வேதாந்தா குழுமத்தின் கடன் மதிப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்னும் சில ஆண்டுகள் இதே நிலைதான் இருக்கும் என்பதால் வெளிநாட்டு கடனை அடைக்கும் முயற்சியில் வேதாந்தா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

எல்.ஐ.சியிடம் கடன்

எல்.ஐ.சியிடம் கடன்

இதன் ஒரு பகுதியாகத்தான் எல்ஐசி நிறுவனத்திடம் சுமார் ரூ.5000 கோடி கடன் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.10 வருடங்களில் திருப்பிச் செலுத்தக்கூடிய வகையில் ரூபாய் ரூ.4809 கோடி ரூபாய் எல்.ஐ.சியில் கடன் வாங்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு எல்ஐசி நிறுவனத்திற்கு 8.5 சதவீத வட்டி வழங்க இந்நிறுவனம் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

வங்கிக்கடன்

வங்கிக்கடன்

ஏற்கனவே வேதாந்தா நிறுவனம் கனரா வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகியவற்றில் 1000 கோடி ரூபாயை 7.6 சதவீத வட்டியில் கடன் வாங்கியது. மூன்று ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தக்கூடிய வகையில் இந்த கடன் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி முதிர்ச்சி அடையும் வகையில் பத்திரங்கள் மூலமும் மேற்பட்ட வங்கிகள் ரூபாய் 500 கோடியை வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளன. இந்த தொகையையும் வேதாந்தா நிறுவனம் தனது வெளிநாட்டுக் கடனை அடைப்பதற்கு பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Lic to lend Rs.5000 crore to Vedanta Group?

Lic to lend Rs.5000 crore to Vedanta Group? | தமிழகத்தில் இருந்து வெளியேறும் நிறுவனத்திற்கு ரூ.5000 கோடி கடன் கொடுக்கும் எல்.ஐ.சி?

Story first published: Thursday, June 30, 2022, 8:48 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.