கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலையில் உள்ள கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்துக்கு நடந்த தேர்தலில் புதிதாக உருவான பி.ஜி.பி.எம்., எனப்படும் பாரதிய கூர்க்கா பிரஜாதந்திரிக் மோர்ச்சா கட்சி அமோக வெற்றி பெற்றது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, டார்ஜிலிங் மலையில் உள்ள கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்துக்கு, 2012ல் தேர்தல் நடந்தது. கடந்த, 2017ல் தனி மாநிலம் கேட்டு கூர்க்காலாந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், 10 ஆண்டுக்குப் பி், பிராந்திய நிர்வாகத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதை, கூர்க்காலாந்து ஜனமுக்தி மோர்ச்சா, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.
இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், மொத்தமுள்ள 45 இடங்களில், ஒன்பது மாதங்களுக்கு முன் உருவான பி.ஜி.பி.எம்., கட்சி வென்றது. கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவில் இருந்து பிரிந்து, கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் அனித் தாப்பா, இந்தக் கட்சியை துவங்கியுள்ளார்.ஹம்ரோ கட்சி எட்டு இடங்களிலும், திரிணமுல் காங்கிரஸ் ஐந்து இடங்களிலும், சுயேச்சைகள் ஐந்து இடங்களிலும் வென்றனர். கூர்க்காலாந்து பிராந்திய தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் முதல் முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement