பெட்ரோல்- டீசல் விலை
சென்னையில் 39 வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் இல்லை . பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டிஎன்பில் : இன்று 2 போட்டிகள்
டிஎன்பிஎல் ; பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன . இரவு 7.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
மகாராஷ்டிரா அரசியல்
உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக வலியுறுத்தியது. இந்நிலையில் நேற்று பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இந்நிலையில் ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள். ஆளுநர் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
உள்ளாட்சித் தேர்தல் : ஓபிஎஸ் கடிதத்தை இபிஎஸ் ஏற்கவில்லை எனத் தகவல்
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இபிஎஸ்க்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் ஓபிஎஸ் கடிதத்தை இபிஎஸ் ஏற்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒப்புதல் கிடைக்காததால் இரட்டை இலை சின்னத்தில் அதிமுகவினர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ராணிப்பேட்டை அரசு ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில் ஆய்வு செய்தார் முதலமைச்சர். ஆய்வின் போது பணியில் இல்லாத விடுதி கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். விடுதி கண்காணிப்பாளர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் முதலவர்.
மத்திய அரசின் உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற ட்விட்டா் நிறுவனத்துக்கு ஜூலை 4ம் தேதி வரை கெடு விதித்துள்ளது மத்திய அரசு. உத்தரவுகளை பின்பற்றாவிடில் ட்விட்டா் நிறுவனம் சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராணிப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். வகுப்பறையில் மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்
பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் நாளை முதல் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். பான், ஆதார் எண்களை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்காலை 09.15 மணி இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தினை திறந்து வைக்கிறார். காலை 09.30 மணி இராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரையாற்றுகிறார். காலை 10.45 மணி இராணிப்பேட்டை பிஞ்சி ஏரியினை பொழுதுபோக்கு இடமாக மாற்றும் பணிகள் மற்றும் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிடுகிறார்.