மத்தியப் பிரதேசத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன், சுமார் 8 மணி நேர போராட்டத்துக்குப்பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
சத்தர்பூர் மாவட்டம் நாராயண்பூர் கிராமத்தில் அகிலேஷ் யாதவ் என்பவரின் 5 வயது மகன் திபேந்திரா யாதவ், ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தார். சுமார் 30 அடி ஆழத்தில் சிக்கியிருந்த அச்சிறுவனை மீட்க, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் போராடினர். இடையே மழை பெய்ததால், மீட்புப் பணிகள் சவாலானதாக அவர்களுக்கு அமைந்தது. எனினும் விடாமுயற்சியுடன் செயல்பட்ட அவர்கள், 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் சிறுவனை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிறுவன் மீட்கப்படுவதற்கு முன் குழிக்குள் தடுமாறிக் காத்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் அவர் தைரியத்துடன் பொறுமையாக அமர்ந்திருந்த காட்சிகள்தான், மீட்பு பணியை மேற்கொண்ட வீரர்களுக்கு நம்பிக்கையளித்திருக்கிறது. சிறுவனின் அசைவை வைத்து கேமிராவுடன் சேர்த்து ஆக்சிஜன் பைப்-ஐ யும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் அனுப்பியதாக சத்தர்பூர் மாவட்ட ஆட்சியர் செய்திகளில் தெரிவித்துள்ளார்.
Madhya Pradesh | 5-year-old Deepender Yadav who was safely rescued from a borewell in Chhattarpur is doing fine. He will be discharged from the hospital after 24 hours, said Civil Surgeon JL Ahirwar (29.06) pic.twitter.com/yGHkSxPROB
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 29, 2022
இதையும் படிங்க… உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் – முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்
சிறுவனை மீட்க, சிறுவன் இருந்த இடத்திலிருந்து அருகில் 25 அடி ஆழத்தில் வேறொரு துளையிட்டு, அதன் வழியே போர்வெல்-ஐ அடைய சுரங்கப்பாதை அமைத்து, அதற்குள் வீரர்கள் சென்றதாக மத்தியப் பிரதேச கூடுதல் தலைமை செயலர் ராஜேஷ் ராஜோரா தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலம், சிறுவனின் தந்தையுடைய விவசாய நிலமென்று அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் மீட்கப்பட்டதை தொடர்ந்து, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹன், சிறுவனின் தாயிடம் தொலைபேசி வழியாக பேசியுள்ளார். மேற்கொண்டு சிறுவனுக்கு தேவையான உரிய மருத்துவ உதவிகளை செய்ய தலைமை செயலர், முதன்மை செயலாளர், மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM