பாலியல் குற்ற வழக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
“I Believe I Can Fly” என்பது உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடிய பாப் பாடகர் ஆர்.கெல்லி, பல பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
9 மாதங்களுக்கு முன்பு அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.