முதல் அணி பாதுகாப்புடன் கிளம்பியது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அமர்நாத்: இமயமலையில் உள்ள பனிலிங்கத்தை வணங்கிட அமர்நாத் நோக்கி யாத்ரீகர்கள் பலத்த பாதுகாப்புடன் கிளம்பினர் . ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் யாத்திரையாக செல்வது வழக்கம்.

latest tamil news

காஷ்மீரின் எல்லையில் இருக்கும் இந்த பாதையில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

latest tamil news

அனந்தனாக் மாவட்டத்தில் பெகல்காம் என்ற பகுதியில் உள்ள நன்வான் முகாமில் இருந்து கிளம்பிய பயணிகளை அங்குள்ள துணை கமிஷனர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். முதல் கட்டமாக 2, 750 பேர் கிளம்பியுள்ளனர்.

latest tamil news

முன்னதாக ஜம்முவில் இருந்து 4,890 பேரை காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து வழியனுப்பினார். இவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு சில குழுக்களாக அனுப்பி வைக்கப்படுவர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.