வீடு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் வாழ் நாள் கனவாகவே இருக்கும். குறிப்பாக வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு தெரியும் சொந்த வீட்டின் அருமை.
வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்று நினைக்கும் பலருக்கும் வந்து நிற்கும் முதல் தடையே பணம் தான். வீடு கட்ட நினைப்போரும், கட்டிக் கொண்டிருப்போரும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு கட்டுவதில்லை.
ஜிஎஸ்டி கவுன்சில்: 3 துறைக்கு முக்கிய அறிவிப்பு.. சிறப்பான வரி சலுகை..!
பெரும்பாலும் கடன் வாங்கியே கட்டுகின்றனர். வாங்குகின்றனர். குறிப்பாக வீட்டுக் கடன் வாங்கி கட்டுவது தற்போது இயல்பான ஒரு விஷயமாக மாறிவிட்டது. சொல்லப்போனால் ஒரு கனவு வீட்டிற்கும் நிஜத்திற்கும் இடையில் ஒரு பாலமாக இருப்பது வீட்டுக் கடன்கள் தான்.
என்ன கவனிக்கிறோம்?
கடன் வாங்கியே வீடு கட்டினாலும் வட்டி விகிதம் எங்கு குறைவு? நமக்கு உகந்தது எது என்பதை யோசிப்பவர்கள் சிலர். ஆக வீட்டு கடன் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
சிறு விஷயங்களை தவற விடுகிறோம்?
பொதுவாக வீட்டுக் கடன் என்றாலே எந்த வங்கியில் ஆவணம் குறைவு, யார் விரைவில் கடன் கொடுப்பார்கள், வட்டி எவ்வளவு இதுபோன்ற விஷயங்களை மட்டுமே பார்க்கின்றோம். ஆனால் மற்ற கட்டண விவரங்கள் என்ன என்பதை பார்க்க மறக்கிறோம். ஆனால் தவற விடும் சிறு விஷயம் கூட உங்கள் பாக்கெட்டில் இருந்து கணிசமான தொகயை எடுத்துக் கொள்ளும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எதையும் மிஸ் செய்யாதீர்கள்
ஆக வீட்டுக் கடன் வாங்கும் முன்பு உங்களிடம் இருந்து என்னென்ன கட்டணங்கள் எல்லாம் வசூலிக்கப்படுகின்றப்ன. அது எவ்வளவு வசூலிக்கப்படுகின்றது. இதில் இருந்து எப்படி உங்களை விலக்கில்க் கொள்வது? இது எல்லாவற்றையும் சமாளித்து எப்படி வீட்டுக் கடன் வாங்குவது வாருங்கள் பார்க்கலாம்.
முத்திரை கட்டணம்
நீங்கள் ஒரு சொத்தினை பரிவர்த்தனை செய்யும்போது அரசாங்கம் வரி விதிக்கிறது. இந்த வரியே முத்திரை வரி என்றழைக்கப்படுகிறது. இது மா நில அரசாங்கத்தால் விதிக்கப்படும் ஒரு வரியாகும். உங்கள் பெயரில் உள்ள பதிவுகளை சரிபார்க்க இந்த கட்டணம் பயன்படுத்தப்படுகின்றது. இது உங்களின் சொத்து உரிமை ஆவணத்தினை சட்டபூர்வமாகுகிறது. இந்த சொத்து வரியானது சொத்தின் சந்தை மதிப்பு, அமைவிடம், சொத்து உரிமையாளரின் வயது மற்றும் பாலினம், சொத்தின் நோக்கம் என்ன, அதாவது குடியிருப்பா அல்லது வணிக பயன்பாடா? மாடிகளின் எண்ணிக்கை என பல காரணிகளை பொருத்து இந்த வரி இருக்கும். தமிழகத்தில் இது 7% ஆக வசூலிக்கப்படுகின்றது.
செயல்பாட்டுக் கட்டணம்
செயல்பாட்டுக் கட்டணம் என்பது வங்கிகளில் பெறும் அனைத்துக் கட்டணங்களுக்கும் வசூலிக்கப்படும் ஒரு கட்டணமாகும். இது வீட்டுக் கடனுக்கும் பொருந்தும்.
வீட்டுக் கடன் விண்ணப்பத்தினை வங்கிகள் ஏற்றுக் கொண்டவுண்டன், வங்கிகளுக்கு நீங்கள் இந்த கட்டணத்தினை செலுத்த வேண்டும். இது ஒரு முரை மட்டுமே வசூலிக்கப்படும். இது வங்கிக்கு வங்கி வேறுபடும், ஆக கடன் வாங்கும் முன்பு இதனை தெரிந்து கொண்டு வாங்குவது உங்கள் செலவினை மிச்சப்படுத்தலாம். சில வங்கிகள் கடன் தொகையில் 0.5%ல் இருந்து வசூலிக்கின்றன.இது சில சமயங்களில் 7% வரை கூட செல்லலாம். ஆக கடனுக்கு அணுகும் முன்பு இதனையும் தெரிந்து கொள்வது நல்லது.
ரேட் கன்வெர்ஷன்/மாறுதல் கட்டணம்
வீட்டுக் கடனை திரும்ப செலுத்தும் காலத்தில் வட்டி விகிதத்தினை மாற்ற கோரி, கடன் வாங்குபவர்கள் அடிக்கடி வங்கியிடம் கோரிக்கை வைக்கலாம். இது எத்தனை முறை ஒரு வாடிக்கையாளர் கோரிக்கை வைக்கலாம். இதற்கு எவ்வளவு கட்டணம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும் . எனினும் சுமார் இது அசல் நிலுவைத் தொகையில் 1 – 2% இருக்கலாம். ஆக உங்களது நிலுவை பெரியதாக இருப்பின், இதனையும் யோசிப்பது நல்லது.
ஓவர்டியூ கட்டணங்கள் (EMI)
நீங்கள் மாத மாதம் செலுத்தும் தவணை தொகையினை செலுத்த தவறினால், அப்போது ஓவர்டியூ கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். இது பொதுவாக ஆண்டுக்கு 24% வசூலிக்கப்படுகிறது. எனினும் வங்கிக்கு வங்கி மாறுபடும். இது நிலுவையில் உள்ள தொகை, தாமதமான தொகைக்கு ஏற்ப விதிக்கப்படுகின்றது. ஆக வீட்டுக் கடனை பெறும்போது இதனையும் கவனத்தில் கொள்வது நல்லது.
முன் கூட்டியே செலுத்தினால் எவ்வளவு கட்டணம்?
இதுவும் வீட்டுக் கடனுக்கு மட்டும் எல்ல விதமான கடன்களுக்கும் பொருந்துகிறது. உங்கள் கடனை முன்கூட்டியே முடிப்பது அல்லது குறிப்பிட்ட தவணைகள் இருக்கும்போதே மொத்தமாக செலுத்துவதற்கும் வங்கிகள் கட்டணம் விதிக்கின்றன. ஆக கடனை எடுக்கும் முன்பே இதனையும் கருத்தில் கொள்வது நல்லது.
இசிஎஸ் பவுன்ஸ்
இதுவும் செக் பவுன்ஸ் போலத் தான்,. வங்கிகள் உங்களது தவணை தொகையை இசிஎஸ் மூலம் பரிவர்த்தனை செய்கின்றன. இதனை எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் என்பார்கள். இதன் மூலம் இஎம்ஐ செலுத்தி வரும், தவணை சரியான நேரத்தில் செலுத்த தவறும்பட்சத்தில் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ஆக இதனையும் நீங்கள் முன் கூட்டியே அறிந்திருக்க வேண்டும்.
Are There So Many Things To Look For In A Home loan
Where is the interest rate lower even if you take a loan to build a house? What are some things to consider before taking a loan? What fees are charged?