ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் நாளை முதல் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.
ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. அவ்வாறு இணைக்க கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பலமுறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மார்ச் 31-ம் தேதிக்குக்குள் இணைக்காதவர்களுக்கு 500 ரூபாய் அபராதத்துடன் ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இது இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாளை முதல் இருமடங்கு அபராதமாக, 1000 ரூபாய் வசூலிக்கப்படவுள்ளது.
இதனிடையே, அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இந்த அபராதத்துடன் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. அதன் பிறகும் இணைக்காதவர்களின் பான் எண்கள் முடக்கப்படும் எனத் தெரிகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM