புதுடில்லி: மத்திய அரசு கேட்டதையடுத்து, ‘அட்டர்னி ஜெனரலாக’ மேலும் மூன்று மாதம் பணியாற்ற, கே.கே.வேணுகோபால் சம்மதித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை, 91, மத்திய அரசு, 2017ல் அட்டர்னி ஜெனரலாக நியமித்தது. இவரது மூன்று ஆண்டு பதவிக்காலம், 2020ல் முடிந்த நிலையில், மத்திய அரசு ஓராண்டுக்கு நீட்டித்தது. கடந்த ஆண்டும், வேணுகோபாலின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இதன்படி, அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது.
‘வயது மூப்பு உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால், அட்டர்னி ஜெனரலாக தொடர்ந்து பணியாற்ற விரும்பவில்லை’ என, மத்திய அரசிடம் வேணுகோபால் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசு கேட்டுக் கொண்டதால், மேலும், மூன்று மாதத்துக்கு அட்டர்னி ஜெனரலாக பணியாற்ற வேணுகோபால் சம்மதித்துள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடில்லி: மத்திய அரசு கேட்டதையடுத்து, ‘அட்டர்னி ஜெனரலாக’ மேலும் மூன்று மாதம் பணியாற்ற, கே.கே.வேணுகோபால் சம்மதித்துள்ளார்.மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை, 91, மத்திய அரசு, 2017ல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.