வில்லனாக அதட்டல், உருட்டல் நடிப்பில் மிரட்டும் மைம் கோபி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இப்போ பிஸி மேன். ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துவரும் ‘சலார்’ படப்பிடிப்பில் நேற்று தன் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடியவருடன் பேசினேன்.
`புஷ்பா’ உட்பட தெலுங்கில் 13 படங்களுக்கு மேல நடிச்சிருக்கீங்க. `புஷ்பா 2’ல இருக்கீங்களா?
”தெலுங்கில் ‘செலோ’ படத்துலதான் முதல்ல அறிமுகமானேன். ‘செலோ’, ‘பீஷ்மா’ ரெண்டு படத்துக்குமே விக்கிதான் இயக்குநர். அவர்தான் என்னை டோலிவுட் அழைச்சிட்டுப் போனார். `புஷ்பா’ படத்துல ஒர்க் பண்ற பிரபாவுக்கு என்னை அறிமுகப்படுத்தி வச்சது விக்கி தம்பிதான். அப்புறம் இயக்குநர் சுகுமார் சார்கிட்ட பிரபா என்னைப் பத்திச் சொன்னதும், அவர் நேர்ல வரச் சொன்னார். மேக்கப் டெஸ்ட் எடுத்தாங்க. செலக்ட் பண்ணிட்டாங்க. ஆனா இவ்வளவு பெரிய கேரக்டரா அது இருக்கும்னு எனக்குத் தெரியாது. அதே வேகத்துல படப்பிடிப்புக்குக் கிளம்பினோம். ஒரே மூச்சுல படப்பிடிப்பு நிறைவடைஞ்சது. படம் ரிலீஸாச்சு. பயங்கர ஃபேமஸாகிடுச்சு. அல்லு அர்ஜுன் சார்கூட ஒர்க் பண்ணினது சந்தோஷமா இருக்கு. அவர் ஒர்க் பண்றதைப் பார்த்தாலே நமக்கும் எனர்ஜி பத்திக்கும். சூப்பர் நடிகர். நிறைய மெனக்கெடுவார்.
தெலுங்கில் இவ்வளவு படங்கள் நடிச்சிருந்தாலும், தெலுங்கு ஆரம்பத்துல தெரியாது. மொழியோட ஒலியைப் புரிஞ்சுக்கிட்டேன். அந்த மீட்டரைப் பிடிச்சுக்கிட்டு டயலாக்கையும் உள்வாங்கினேன். எளிதா பேசிட்டேன். ஆனா, டப்பிங்கின் போது, மூணு மைக் வச்சுப் பண்ண அவங்க திட்டமிட்டதால, அது ஐதராபாத்தில் நடந்தது. ஸோ, இன்னொருத்தர வச்சு டப்பிங் பண்ணினாங்க. அவரும் நல்லா பேசியிருந்தார். ‘புஷ்பா 2’ இன்னும் சூப்பரா இருக்கும். கடவுள் கிருபையால் அதில் இருப்பேன்னு நினைக்கறேன். இயக்குநரும், காலமும், சினிமாவும் அதை முடிவு பண்ணும். அடுத்து பேன் இந்தியா படமா ஒரு பெரிய படம் பண்ணிட்டிருக்கேன். ரொம்ப எதிர்பார்க்கறேன்.
உங்க மேரேஜ் லவ் மேரேஜ்னு கேள்விப்பட்டோம். உங்க காதல் கதையை கொஞ்சம் சொல்லுங்க?
”நான் வாய்ப்புத் தேடிட்டு இருந்த காலகட்டம் அது. அப்பெல்லாம் நான் ரொம்ப ஜாலியா இருப்பேன். ஒரு தொண்டு நிறுவனத்துக்கு மைம் பண்ண போயிருந்தேன். அங்கே தான் என் மனைவியை பார்த்தேன். அவங்க டாக்டர். என்னை பார்த்த நொடியில அவங்க இம்ப்ரஸ் ஆகிட்டாங்க. தெரியாம இம்ப்ரஸ் ஆகிட்டாங்கனு நினைக்கறேன். அப்புறம் எங்க வீட்டுல சம்மதம் சொல்லிட்டாங்க. ஆனா, அவங்க படிச்சவங்க என்பதால அவங்க வீட்டுல சம்மதிக்கல. அவங்க வீட்டுல சம்மதிக்கற வரை போராடினோம். அந்த போராட்டத்துக்குப் பிறகு எங்க திருமணம் ஆச்சு. எங்க கல்யாண பரிசா ஒரே ஒரு பையன் இருக்கார். ஸ்கூல் போறார் அவர்.”
இந்த நேர்காணலின் முழு பகுதியைக் காண க்ளிக் செய்யவும்.