இந்தியாவில் மூக்குக்கண்ணாடி மற்றும் கூலிங்கிளாஸ் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள வேளையில் ரிலையன்ஸ் ஏற்கனவே வைத்திருக்கும் விஷன் எக்ஸ்பிரஸ் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதோடு, ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் இந்தியாவில் ரே-பான் பிராண்டட் ஸ்டோர்களைத் திறக்க இத்தாலியின் லக்சோட்டிகா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இதேவேளையில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ்-ன் மூக்குக்கண்ணாடி வர்த்தகத்திற்குக் கடுமையான நெருக்கடியை உருவாக்கிய லென்ஸ்கார்ட் தற்போது இந்தியாவைத் தாண்டி ஆசியா முழுவதும் வர்த்தகம் செய்ய அதிரடி கூட்டணியை அமைத்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் சேர்மன் பதவியை கைப்பற்றினார் ஈஷா அம்பானி.. விரைவில் அறிவிப்பு..!
லென்ஸ்கார்ட்
இந்தியாவின் தலைநகரான டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் முன்னணி Eyewear ரீடைல் விற்பனை பிராண்டாக விளங்கும் லென்ஸ்கார்ட் நிறுவனம் தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் விதமாக ஜப்பான் நாட்டின் Owndays இன்க் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவிலான பங்குகளை வாங்கிப் பிரம்மாண்ட கூட்டணியை உருவாக்கியுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய நிறுவனம்
ஆசியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஐவியர் (Eyewear) ரீடைல் நிறுவனமாக உருவெடுக்க இக்கூட்டணி பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் வெளிநாட்டு நிறுவனங்கள் தான் இந்தியாவுக்கு வரும், ஆனால் ஸ்டார்ட்அப் கலாச்சாரம் இந்தியாவில் உருவான பின்பு பல முன்னணி நிறுவனங்கள் தற்போது வெளிநாட்டில் வர்த்தகம் செய்யத் துவங்கியுள்ளது. இந்த நீண்ட நெடு பட்டியலில் தற்போது லெஸ்கார்ட்-ம் சேர்ந்துள்ளது.
ஜப்பான் Owndays நிறுவனம்
ஜப்பான் சாப்ட்பேங்க் முதலீட்டில் இயங்கி வரும் லென்ஸ்கார்ட், எல் காட்டர்டான் ஏசியா மற்றும் மிட்சுயி & கோ ஆகிய நிறுவனங்கள் Owndays நிறுவனம் வைத்துள்ள பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து லென்ஸ்கார்ட் இந்நிறுவன பங்குகளை வாங்க உள்ளது. இந்தப் பங்குகளின் மதிப்பு சுமார் 400 மில்லியன் டாலராகும்.
வர்த்தகம், வாடிக்கையாளர்
owndays நிறுவனம் தென் ஆசிய நாடுகள் பலவற்றிலும் இருந்தாலும் ப்ரீமியம் வாடிக்கையாளர்களை மட்டுமே இலக்காக வைத்து இயங்கி வருகிறது. ஆனால் லென்ஸ்கார்டு மிடில் மற்றும் மாஸ் மார்கெட் சந்தையில் கவனம் செலுத்தும் நிலையில் இக்கூட்டணி மிகப்பெரிய வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
400 மில்லியன் டாலர்
இந்த 400 மில்லியன் டாலர் ஒப்பந்தம் மூலம் owndays நிறுவனத்தில் அதிகப்படியான பங்குகளை வைத்திருப்பது லென்ஸ்கார்ட் ஆக இருந்தாலும், இதை மெர்ஜெர் அதாவது இரு நிறுவனங்களும் இணைக்கும் ஒரு திட்டமாகவே மதிப்பிடப்படுகிறது. owndays நிறுவனத்துடனான கூட்டணி மூலம் இந்தியாவைத் தாண்டி லென்ஸ்கார்ட் ஆசியாவில் 13 நாடுகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.
13 நாடுகள்
ஆசியாவில் சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜப்பான் உட்பட 13 சந்தையில் லென்ஸ்கார்ட் செல்ல உள்ளது.
ரிலையன்ஸ்
இப்போ சொல்லுங்க முகேஷ் அம்பானிக்குக் கடுப்பு ஆகுமா ஆகாத.. இந்தியாவில் ஏற்கனவே பெரும் பகுதி வர்த்தகத்தைப் பெற்றுள்ள லென்ஸ்கார்டு தற்போது 13 நாடுகளுக்குச் செல்ல உள்ளது, ஆனால் ரிலையன்ஸ் விஷன் எக்ஸ்பிரஸ் அங்கேயே உள்ளது.
Delhi based Lenskart acquires Japan’s Owndays stake; Lenskart expanding business to 13 Countries
Delhi based Lenskart acquires Japan’s Owndays stake; Lenskart expanding business to 13 Asian Countries, to create Asian eyewear giant முகேஷ் அம்பானியை சீண்டும் டெல்லி நிறுவனம்.. 13 நாடுகளுக்குத் தடாலடி விரிவாக்கம்..!