AK 61: லண்டனில் போட்டோ ஷுட்; வரப்போகும் புது லுக்; டைட்டில் அறிவிக்கும் தேதி இதுதான்!

அஜித் தனது `ஏகே-61′ படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி கிடைத்த இடைவெளியில் இப்போது ஐரோப்பிய நாடுகளில் பைக் ட்ரிப்பில் மகிழ்ந்து வருகிறார். இதனிடையே அவரது 61வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `ஏகே-61′ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. `வலிமை’யில் இணைந்த நீரவ் ஷா, திலீப் சுப்பராயன் இவர்களுடன் ஜிப்ரான், சுப்ரீம் சுந்தர் போன்ற டெக்னீசியன்களும் பணியாற்றி வருகின்றனர். அஜித்தின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இவர்கள் தவிர படத்தில் சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொகேன், ஜி.எம்.சுந்தர், ‘மகாநதி’ சங்கர், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.

அஜித்

அஜித் இப்போது லண்டன் பயணத்தில் இருக்கிறார். அடுத்த மாதம் 2-வது வாரத்திற்குள் அவர் சென்னை திரும்பி விடுவார் என்கிறார்கள். அதன் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு கிளம்பவிருக்கிறார்கள். இதற்கிடையே வரும் ஜூலை முதல் வாரத்தில் பேட்ச் ஒர்க் வேலைகள் சில நாட்கள் இருக்குமெனவும் தகவல். அதனைத் தொடர்ந்து ஏகே சென்னை திரும்பியபின், அவரது போர்சன்கள் படமாக்கப்பட உள்ளது. தொடர்ந்து 30 நாட்கள் அஜித் கால்ஷீட் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அஜித்

‘ஏகே61’ படத்தின் நெகட்டிவ் ஷேட் லுக்கில் உள்ள அஜித், இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பில் இருந்து நல்லவன் லுக்கிற்கு மாறுகிறார். அதற்கான லுக் டெஸ்ட்களையும் லண்டனில் போட்டோஷுட் செய்ய உள்ளதாகவும் சொல்கிறார்கள். அடுத்த ஷெட்யூல் புனேவின் தொடங்குகிறது என பேச்சு இருந்தாலும், இன்னமும் லொக்கேஷன் தேடுதல் வேட்டைகள்தான் நடந்து வருகிறதாம்.

இதற்கிடையே படத்தின் டைட்டில் ஃபைனல் ஆகிவிட்டதாம். மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் பிறந்தநாளன்று படத்தின் டைட்டிலையும், அஜித்தின் அடுத்த லுக்கையும் வெளியிட உள்ளதாகச் சொல்கிறார்கள். படத்தை தீபாவளி வெளியீடாக அறிவித்தனர். அதன்பின், டிசம்பரில் ரிலீஸ் என திட்டமிடுகிறார்கள் என பேச்சு வந்தது, தீபாவளிக்கு வெளிக்கொண்டு வருவதில் மும்முரமாக உழைத்து வருகிறார்கள் என்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.