வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீஹரிகோட்டா : மூன்று செயற்கைக் கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. – சி 53 ராக்கெட்டை இன்று (ஜூன் 30) விண்ணில் ஏவப்பட்டது.
‘இஸ்ரோ’எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு நாட்டின் பாதுகாப்பு தொலை தொடர்பு தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்கு பி.எஸ்.எல்.வி. – ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் வாயிலாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதுதவிர வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான டி.எஸ். – இ.ஓ. உட்பட மூன்று செயற்கைக் கோள்கள் பி.எஸ்.எல்.வி. – சி 53 ராக்கெட் வாயிலாக இன்று மாலை 6:00 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இதற்கான 25 மணி நேர ‘கவுன்ட் டவுன்’ நேற்று (ஜூன் 29) மாலை 5:00 மணிக்கு துவங்கியது. சிங்கப்பூரை சேர்ந்த மூன்று செயற்கைக் கோள்களில் முதன்மையானதான டி.எஸ். – இ.ஒ. செயற்கைக் கோள் 365 கிலோ எடை உடையது. இது தெளிவாக வண்ண புகைப்படங்களை எடுக்கும் திறன் உடையது.
அடுத்து 155 கிலோ எடை உடைய ‘நியூசர்’ செயற்கைக்கோள் இரவு பகல் என அனைத்து வானிலை சூழலிலும் புவியை துல்லியமாக படம் எடுக்கும். சிங்கப்பூரை சேர்ந்த நன்யாங் தொழில்நுட்ப பல்கலை மாணவர்கள் வடிவமைத்த 2.8 கிலோ எடை உடைய ‘ஸ்கூப் – 1’ செயற்கைக்கோள் கல்வி பணிகளுக்காக அனுப்பப்பட்டது.
Advertisement