டிஎஸ்-இஓ புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மாலை 6 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
டி.எஸ் இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி -53 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை பொருத்தி அவற்றை விண்ணில் ஏவி வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு பி.எஸ். எல்.வி.சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவியது.
இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பிஎஸ்எல்வி சி- 53 ராக்கெட்டில் 365 கிலோ எடை கொண்ட டிஎஸ்- இஓ எலக்ட்ரோ-ஆப்டிக் செயற்கைகோள் என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளும், அதனுடன் சிங்கப்பூரின் மற்றொரு செயற்கைகோளான 155 கிலோ எடை கொண்ட என்இயு-சாட் மற்றும் 2.8 கிலோ எடையுள்ள ஸ்கூப் 1 உள்பட 3 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 16வது ராக்கெட் இதுவாகும். டிஎஸ்-இஓ செயற்கைக்கோள் அதிக தெளிவு திறன் மற்றும் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம் எடுக்கும் வசதி கொண்டது. இது கடல்சார் பாதுகாப்பு, பேரிடர் மீட்பு, பேரிடர் மீட்புக்கு தேவைப்படும் மனித வளங்களை கண்டறிவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். 44.4 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் பூமியில் இருந்து 570 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அழைத்துச் செல்லப்படும் பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. PSLV-C53/DS-EO ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இஸ்ரோ தலைவராக சோமந்த் பொறுப்பேற்ற பிறகு இன்று முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்து இஸ்ரோவின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து பேட்டி அளித்தார்.
#ISROMissions
CONGRATULATIONS #ISRO!#ISRO launches #PSLVC53 from Satish Dhawan Space Centre (SHAR), #Sriharikota@isro pic.twitter.com/pfpJgLClw3
— Doordarshan National दूरदर्शन नेशनल (@DDNational) June 30, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM