இந்தியாவிலேயே தயாரான முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஜெம்கோவாக்-19 அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசியை 4000 தன்னார்வ தண்டர்களிடம் பரிசோதனை செய்ததை அடுத்து இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3 பேருக்கும் சமமாக சொத்து வரும்.. எந்த பஞ்சாயத்தும் பண்ண கூடாது.. முகேஷ் அம்பானி ஆர்டர்?!
இந்தியாவில் தயாராகி கிடைக்கும் முதல் உள்நாட்டு ஜெம்கோவாக்-19 தடுப்பூசி மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது. எனவே இந்த தடுப்பூசி எப்படி உருவாக்கப்பட்டது, என்ன விலை போன்ற விவரங்களை இங்கு விளக்கமாக பார்க்கலாம்
தூள் வடிவ தடுப்பூசி
ஜெம்கோவாக்-19 தடுப்பூசி மற்றும் தடுப்பூசிகள் போல் இல்லாமல் ஒரு சில கூடுதல் நன்மைகளை தரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் போல் இந்த தடுப்பூசி திரவ வடிவில் இல்லை என்பதும் இது தூள் வடிவில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
18 வயதுக்கு மேல்
18 வயதுக்கு மேல் உடையவர்களுக்கு இந்த தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் 28 நாட்கள் கழித்து 2வது டோஸ் செலுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த வெப்பநிலை
இந்தத் தடுப்பூசிகளை பாதுகாக்க மிக குறைந்த வெப்பநிலை மட்டுமே தேவைப்படுவதால் இந்தியாவின் மிக தொலைதூர பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
விலை
ஜெம்கோவாக்-19 தடுப்பூசி விலையை அரசு தீர்மானிக்கும் என்றும் இருப்பினும் இது மற்ற தடுப்பூசிகளின் விலைக்கு போட்டித் தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
உற்பத்தி
ஜெம்கோவாக்-19 தடுப்பூசியை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் ஒரு மாதத்திற்கு நான்கு அல்லது ஐந்து மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்ய இலக்காக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வருங்காலத்தில் டோஸ்களின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கும் என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முதல், உலகின் 3வது
ஜெம்கோவாக்-19 தடுப்பூசி இந்தியாவின் முதல் mRNA தடுப்பூசி மற்றும் உலகின் மூன்றாவது mRNA தடுப்பூசி என்பது சிறப்பு அம்சமாகும். பொதுவாக mRNA தடுப்பூசி பாதுகாப்பானது என கருதப்படுகிறது. ஏனெனில் இந்த தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சாத்தியம் இல்லை என்றும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த தடுப்பூசியை தற்போதைய கொரோனா வைரஸ் திரிபு மற்றும் இனிமேல் ஏற்படும் புதிய திரிபுகளுக்கு ஏற்ற வடிவில் நெகிழ்வு தன்மையுடன் செயல்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம்
இந்த தடுப்பூசியை மூன்று கட்ட மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் முடிவுகள் திருப்திகரமாக இருந்ததால் இந்த தடுப்பூசிக்கு அனுமதி தரப்பட்டு உள்ளதாக தேசிய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதால் எந்தவித பக்கவிளைவும் இருக்காது என்றும் அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டது என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை
இந்தியா மட்டுமின்றி உலகின் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இதற்காக இந்நிறுவனம் உலகின் பல நாடுகளை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
India’s first mRNA Covid-19 vaccine is GEMCOVAC-19!
India’s first mRNA Covid-19 vaccine is GEMCOVAC-19! | இந்தியாவின் முதல், உலகின் 3வது அவசரகால பயன்பாட்டு தடுப்பூசி: யார் யார் போட்டு கொள்ளலாம்?