வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணத்தால் கவிழ்க்கிறது பா.ஜ., என ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் எதிர்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த்சின்ஹா கூறினார்
விரைவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த்சின்ஹா தி.மு.க.,மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக சென்னை வந்தார். தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினேன். ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் எனக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி.10-வது நபராக என்னை தேர்வு செய்திருந்தாலும் போட்டியிட்டு இருப்பேன். அரசியல்அமைப்புசட்டத்தை பாதுகாக்கும் வகையில் செயல்படுவேன். தேர்தலில் வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் மதச்சார்பின்மைக்கு ஆதரவாக செயல்படுவேன்
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு உள்ளது. புதிதாக பதவி ஏற்க உள்ள நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்பதால் பா.ஜ., ஆட்சி அமைக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணத்தால் கவிழ்க்கிறது பா.ஜ., . அரசியலமைப்பை சிதைக்கும் வகையில் மத்திய பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது. மேலும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை சிதைத்து வருகிறது. கவர்னரின் செயல்பாடு அரசியல் சட்டத்தின் படி இருக்க வேண்டும். தற்போது அவ்வாறு இல்லை. தமிழக கவர்னரின் செயல்பாடுகள் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement