இந்தியாவில் இருந்து கிடைக்கும்  யூரியா உரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தல் 

இந்திய அரசாங்கத்தினால்  கிடைக்கும் யூரியா உரத்தை நெல் பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு  இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

அனைத்து நெற்செய்கையாளர்களுக்கும் நெற்செய்கையை மேற்கொள்ளுமாறு

விவசாய அமைச்சு பணிப்புரை விடுத்திருந்தது.  இதன் காரணமாக அந்த விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்ததன் பின்னர் விநியோகிக்கப்படும் முறை தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சில் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த யூரியா உரத்தை ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோகிராம் என்ற விகிதத்தில் வழங்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியிருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இவை கிடைத்ததன் பின்னர் அனைத்து விவசாய மத்திய நிலையங்களுக்கும் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை விவசாய அமைச்சு மேற்கொண்டுள்ளது.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பூரண மேற்பார்வையின் கீழ் கொமர்ஷல் உர நிறுவனம் மற்றும் இலங்கை உர நிறுவனம் ஆகியவற்றினால் இதனை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உரம் விநியோகிக்கும் போது விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களின் பூரண ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் வசிக்கும் பிரதேசத்தில் அவர்களது நியமனங்களை வழங்குமாறும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கமநல சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.