சாமானிய நடுத்தரக் குடும்பத்தில் சொத்து பிரித்தாலே பல பிரச்சனைகள் வெடிக்கும், 17 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு, பல ஆயிரம் கோடிக்கு பர்சனல் சொத்துக்கள், வீடு, நிலம், விமானம் எனக் கொட்டிக்கிடக்கும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் 3 பிள்ளைகளுக்கும் சொத்துக்களைப் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை.
தமிழ்நாடு உடன் 4 மாநிலங்கள் போட்டி.. மகாராஷ்டிரா வேற இருக்குதே..! எதற்காக தெரியுமா..?
முகேஷ் மற்றும் அனில் அம்பானி
சொல்லப்போனால் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி மத்தியில் சொத்துக்களைப் பிரிக்கும் போது நடந்த கூத்து இந்திய மக்களைத் தாண்டி உலகம் முழுவதும் பிரபலம். திருபாய் அம்பானி உருவாக்கிய ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் சொத்துக்களைப் பிரிக்க அண்ணனும் தம்பியும் பல வருடங்கள் அடித்துக்கொண்டனர்.
3 பிள்ளைகள்
இதில் இருந்து பாடம் கற்ற முகேஷ் அம்பானி தனது 3 பிள்ளைகள் மட்டும் அல்லாமல் தன்னுடைய எதிர்காலம், நீதா அம்பானிக்கான அதிகாரம் என அனைத்தையும் எவ்விதமான் பஞ்சாயத்தும் இல்லாமல் கொண்டு செல்ல முடிவு செய்து அதற்கான முதல் காயை நகர்த்தியுள்ளார்.
ஆகாஷ், ஈஷா, அனந்த் அம்பானி
முகேஷ் அம்பானி – நீதா அம்பானிக்கு 3 பிள்ளைகள் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி. இதில் மூத்த பிள்ளைகளான ( டிவின்ஸ் ) ஆகாஷ் மற்றும் ஈஷா 2015 முதல் ரிலையன்ஸ் நிர்வாகப் பணியில் இருந்து வருகின்றனர், ஆனால் அனந்த் அம்பானிக்கு இப்போது தான் 27 வயதாகிறது. சமீபத்தில் தான் முக்கியமான வர்த்தகப் பிரிவில் நிர்வாகப் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
யாருக்கு எது
இப்படியிருக்கும் சூழ்நிலையில் யாருக்கு எதைக் கொடுப்பது, தனக்கு எது, மனைவிக்கு என்ன என்பது சிறிய கேள்வியாக இருந்தாலும் இதற்குப் பதில் அவ்வளவு எளிதாகக் கொடுக்க முடியாது. ஈஷா அம்பானி திருமணத்திற்குப் பின்பு முகேஷ் அம்பானி குடும்பத்தில் அவ்வப்போது சொத்துப் பிரிப்பு, நிறுவனத்தில் அதிகாரம் யாருக்கு என்ற கேள்வியும், சர்ச்சையும் உருவானது.
குடும்பக் கவுன்சில்
இதைச் சமாளிக்க முகேஷ் அம்பானி குடும்பத்தையும் சரி, நிறுவனத்தையும் சரி எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் வழிநடத்த முக்கிய அதிகாரிகள், முக்கியக் குடும்ப உறுப்பினர்கள் கொண்ட குடும்பக் கவுன்சில் அமைக்கப்பட்டது. ஆனால் இதை முகேஷ் அம்பானி திட்டவட்டமாக மறுத்தார், உண்மையில் அதன் பின்பு தான் அம்பானி குடும்பம் சொத்துப் பிரிப்பதில் தீவிரமாக இறங்கியது.
ஆகாஷ் அம்பானி
இந்த மாபெரும் திட்டத்தில் முதல் காயை நகர்த்தி முகேஷ் அம்பானி ஆகாஷ் அம்பானி-க்கு ரிலையன்ஸ் ஜியோ தலைவர் பொறுப்பைக் கொடுத்துள்ளார். ஆனால் இதேவேளையில் ஜியோ-வின் தாய் நிறுவனத்தின் அதிகாரம் முகேஷ் அம்பானியிடம் தான் உள்ளது. அதாவது குதிரையின் கடிவாளத்தின் கன்ட்ரோல் முகேஷ் அம்பானியிடம் தான் உள்ளது.
ஈஷா அம்பானி
இந்நிலையில் அடுத்தாக ஈஷா அம்பானி-க்கு ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் தலைவர் பதவியைக் கொடுக்க உள்ளதாகத் தெரிகிறது. ஈஷா அம்பானி திருமணமாகி அஜய் பிராமல் குடும்பத்திற்குச் சென்றாலும் முகேஷ் அம்பானி 3 பிள்ளைகளையும் சரி சமம் ஆகப் பார்க்கிறார் (சம உரிமை).
ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ்
ஆகாஷ் அம்பானிக்கு அளித்ததுப் போலவே ரிலையன்ஸ் ரீடைல் பதவியை ஈஷா அம்பானிக்குக் கொடுத்தாலும், அதன் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் தலைமை நிர்வாகப் பொறுப்பு முகேஷ் அம்பானி கையில் தான் இருக்கும்.
ரீடைல் பிரிவு அதிகாரம்
ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் கீழ் தான் 7Eleven, ஆன்லைன் பார்மசி, ஹைப்பர்மார்கெட், சூப்பர்மார்கெட், எலக்ட்ரானிக்ஸ் ஸ்டோர், உணவு பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் கடைகள் உள்ளது. இதில் ரிலையன்ஸ் ரீடைல் வெறும் கிளை நிறுவனம் மட்டுமே.
அனந்த் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் தான் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இருந்தாலும், கிரீன் எனர்ஜி துறையில் தற்போது நுழைந்துள்ளார். ஆகாஷ் அம்பானி போலேவே தற்போது இப்பிரிவு வர்த்தகத்தை ஆரம்பம் முதல் அனந்த் அம்பானி நிர்வாகம் செய்யத் துவங்கியுள்ளார். அடுத்த 5 முதல் 8 வருடத்தில் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி வர்த்தகத்தின் தலைவராக அனந்த் அம்பானி நியமிக்கப்படுவார்.
ஆகாஷ் அம்பானி பதவிகள்
ரிலையன்ஸ் ஜியோ – சேர்மன்
ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் – டைரக்டர்
சாவன் மீடியா – டைரக்டர்
ஜியோ பிளாட்பார்ம்ஸ் – டைரக்டர்
ஈஷா அம்பானி பதவிகள்
ரிலையன்ஸ் ஜியோ – டைரக்டர்
ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் – டைரக்டர்
ஜியோ பிளாட்பார்ம்ஸ் – டைரக்டர்
ரிலையன்ஸ் பவுண்டேஷன் – டைரக்டர்
ஜியோ இன்ஸ்டியூட் – டைரக்டர்
அனந்த் அம்பானி பதவிகள்
ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் – டைரக்டர்
ஜியோ பிளாட்பார்ம்ஸ் – டைரக்டர்
ரிலையன்ஸ் நியூ எனர்ஜி – டைரக்டர்
நீதா அம்பானி பதவிகள்
ரிலையன்ஸ் பவுண்டேஷன் – நிறுவனர், தலைவர்
மும்பை இந்தியன்ஸ் (ஐபிஎல் அணி) – ஓனர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – நிர்வாக உறுப்பினர்
திருபாய் அம்பானி இண்டர்நேஷ்னல் பள்ளி – நிறுவனர்
அப்போ முகேஷ் அம்பானிக்கு..?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இன்னும் எத்தனை நிறுவனங்கள், வர்த்தகங்கள் வந்தாலும் அதன் கீழ் தான் இருக்கும். எனவே முகேஷ் அம்பானி எப்பவுமே அல்டிமேட் அத்தாரிட்டு கொண்டவராக இருப்பார்.
அல்டிமேட் அத்தாரிட்டி
பங்கு இருப்பு உட்பட, அதிகாரம் உட்பட அனைத்திலும் அல்டிமேட் அத்தாரிட்டி கொண்டவராகத் தான் முகேஷ் அம்பானி இருப்பார். காலப்போக்கில் டெலிகாம், ரீடைல், நியூ எனர்ஜி ஆகியவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுப் பிள்ளைகளிடம் ஒப்படைக்கப்பட்டாலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அனைத்திற்கும் தலைமையாக இருக்கும்.
நீதா அம்பானி
இப்படி இருக்கும் போது முகேஷ் அம்பானி எப்பவுமே சிங்கம் தான். முகேஷ் அம்பானிக்கு பின்பு மனைவி நீதா அம்பானிக்கும் இதேபோன்ற அதிகாரம் இருக்கும் ஆனால் அளவீட்டில் சிறிய மாற்றம் இருக்கும். திருபாய் அம்பானி மறைவிற்குப் பின்பு Reliance Industries மற்றும் Reliance ADA ஆகிய இரு குழுமத்திலும் அவரின் மனைவி கோக்கிலா பென் அம்பானி குறிப்பிடத்தக்க அதிகாரத்தை வைத்துள்ளார்.
நான் இருக்கும் வரை நடக்காது.. Zoho ஸ்ரீதர் வேம்பு அதிரடி..!
Mukesh Ambani’s Succession Plan: From Akash ambani to Nita Ambani; Big lesson from dhirubhai ambani
Mukesh Ambani’s Succession Plan: From Akash ambani to Nita Ambani; Big lesson from dhirubhai ambani 3 பேருக்கும் சமமாகச் சொத்து வரும்.. எந்தப் பஞ்சாயத்தும் பண்ண கூடாது.. முகேஷ் அம்பானி ஆர்டர்?!