தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் மாணவர்கள் ஆசிரியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிக்கு வருகை தரும் போது அனைவரும் கட்டாயம் வெப்பமானி கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் உடனே பரிசோதனை செய்யவேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். வகுப்பறைகளில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.