ஜூலை முதல் வட்டி அதிகரிக்கலாம்.. முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கிடைக்குமா?

இந்தியாவில் வட்டி விகிதம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், சில முதலீடுகளுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வங்கிகள் தங்களது டெபாசிட்களுக்கான வட்டி விகித்ததினை ஏற்கனவே அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் தொடர்ந்து பல காலாண்டுகளாகவே வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாத நிலையில், ஜூலை மாதத்தில் அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நாளை முதல் வரவிருக்கும் முக்கிய 3 வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க!

முதலீடுகள் சரிவு

முதலீடுகள் சரிவு

சர்வதேச சந்தையில் நிலவி வரும் சவாலான நெருக்கடி நிலைக்கு மத்தியில் , ரெசசன் அச்சம் நிலவி வருகின்றது. இது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. இது பங்கு சந்தையில் சரிவு, தங்கம் விலையில் தாக்கம், கிரிப்டோகரன்சிகள் சரிவு என முதலீட்டாளர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அஞ்சலக திட்டங்கள் மீது ஆர்வம்

அஞ்சலக திட்டங்கள் மீது ஆர்வம்

இந்த காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் நிரந்தர வருமானம் தரக்கூடிய , பாதுகாப்பான முதலீடுகளை நாடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், சிறுசேமிப்பு திட்டங்களுக்கும் வட்டி அதிகரிக்கலாம் என்பது இன்னும் ஆர்வத்தினை தூண்டியுள்ளது.

 

வட்டி அதிகரிக்கலாம்
 

வட்டி அதிகரிக்கலாம்

இந்திய அரசு அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தினை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்து வருகின்றது. இந்த நிலையில் கொரோனா, அதனை தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியில் சரிவு என பல காரணிகளுக்கு மத்தியில் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஜூலை – செப்டம்பர் 2022க்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய வட்டி நிலவரம்?

தற்போதைய வட்டி நிலவரம்?

ஜூன் 30 நிலவரப்படி, அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்குகளுக்கு 4% வட்டியும், டெர்ம் டெபாசிட்டுக்கு 6.7% வரையிலும், தொடர் வைஒப்பு நிதிக்கு 5.8%மும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 7.45%மும், மாதாந்திர வருமான திட்டம் 6.6%மும், தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 6.8% ஆகவும் வட்டி விகிதம் உள்ளது. இதே வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.1%மும், கிசான் விகாஸ் பத்திரத்டதிற்கு 7.6%

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

PPF and other Small saving scheme interest rate may hike from from July

With interest rates unchanged for several consecutive quarters, there is high expectation that interest rates for postal small savings plans may change in July.

Story first published: Thursday, June 30, 2022, 18:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.