சாண்ட்விச்சில் அதிக மயோனிஸ் இருந்ததால் ஆத்திரம் : 5 வயது மகனின் கண் எதிரே தாயாரை சுட்டு கொன்ற வாடிக்கையாளர்

மெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள சப்வே உணவகத்தில் பரிமாரப்பட்ட சாண்ட்விச்சில்  மயோனிஸ் அதிகம் இருந்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், அங்கிருந்த பெண் ஊழியரை அவரது மகனின் கண் எதிரிலேயே சுட்டுக் கொன்றார்.

சாண்ட்விச்சில் மயோனிஸ் அதிகம் உள்ளதாக கூறி வாக்குவாதம் செய்த அந்த நபர், திடீரென பொறுமை இழந்து அங்கிருந்த பெண் ஊழியர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் உணவகத்தில் இருந்த 5 வயது மகனின் கண் எதிரே அந்த பெண் ஊழியர் உயிரிழந்தார்.

மற்றொரு பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.