நாகை: முதலிரவில் பாலியல் துன்புறுத்தல்… காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்!

நாகை அருகே இளம்பெண் ஒருவர் முதலிரவில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். தலைமறைவான கணவரைக் கைதுசெய்யக்கோரி உறவினர்கள் நாகை  எஸ்.பி-யிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

நாகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையை அடுத்த தொழுதூர் உச்சிமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பிச்சையன். இவர் மகன் ராஜ்குமார் என்பவருக்கும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், குதம்ப நைனார்கோயில் தெருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 26-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக 12 பவுன் நகை மற்றும் கட்டில், மெத்தை, பீரோ, இருசக்கர வாகனம் எனச் சீர்வரிசையாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அன்றிரவு இருவருக்கும் மாப்பிள்ளை ராஜ்குமார் வீட்டில் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, முதலிரவு அறைக்குள் புதுமண தம்பதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முதலிரவு அறையில் ராஜ்குமார் சைக்கோ போல நடந்துகொண்டு மணப்பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதில் உடல் முழுவதும் ரத்த காயங்கள் ஏற்பட்டு, மணப்பெண் மயக்கமடைந்துள்ளார். மேலும், “மணப்பெண் பெண்ணே அல்ல… திருநங்கை” எனச் சத்தமிட்டு கூறிக்கொண்டு ராஜ்குமார் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் முதலிரவு அறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு ரத்த காயங்களுடன் மணப்பெண் மயக்கமடைந்து கிடந்துள்ளார்.

Goverment hospital

உடனே அவரை மீட்ட உறவினர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மேலும் 27-ம் தேதி நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் புகார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகரைச் சந்தித்து மனு அளித்தனர். இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ராஜ்குமாரையும், அவருக்கு உடந்தையாக இருந்த ராஜ்குமாரின் தாயார் ராசாத்திமீதும் வழக்கு பதிவு செய்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் எஸ்.பி.யி-டம் புகார் அளித்துள்ளனர்.

போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.