வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு.. ‘பட்’ நிர்மலா சீதாராமன் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்க..!

ஜூன் காலாண்டின் கடைசி வரத்தக நாளான இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது மும்பை பங்குச்சந்தையும் சரி, அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பும் சரி உயர்வுடனே இருந்தது.

ஆனால் வர்த்தக நேரம் முடியும் போது இரண்டுமே சரிவைச் சந்தித்தது மட்டும் அல்லாமல் பெரும் பாதிப்பை இந்தியச் சந்தையில் உருவாக்கியுள்ளது.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 5 பைசா சரிந்து 78.98 ரூபாயாகச் சரிந்து கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.

3 பேருக்கும் சமமாக சொத்து வரும்.. எந்த பஞ்சாயத்தும் பண்ண கூடாது.. முகேஷ் அம்பானி ஆர்டர்?!

ரூபாய் Vs டாலர்

ரூபாய் Vs டாலர்

இன்றைய வர்த்தகத்தில் மட்டும் ரூபாயின் மதிப்பு அதிகப்படியாக 78.90 ரூபாய் அளவையும், குறைவான அளவாக 78.99 ரூபாயாக உள்ளது. புதன்கிழமையே ரூபாய் மதிப்பு 79 ரூபாயை தாண்டி தனது வரலாற்று சரிவை பதிவு செய்தது மறந்துவிட வேண்டாம்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டாலருக்கு எதிரான பிற உலக நாடுகளின் நாணயங்களை ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கும் முக்கியக் காரணங்கள்
 

பாதிக்கும் முக்கியக் காரணங்கள்

ரஷ்யா – உக்ரைன் போர் வாயிலாக உருவான வர்த்தகப் பாதிப்புகள், அதிகப்படியான கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், உலகம் முழுவதும் தளர்வுகளைக் குறைத்து வரும் நாணய கொள்கைகள் ஆகியவை வளரும் நாடுகளின் நாணய மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வேகமாகக் குறைத்து வருகிறது.

சிறப்பான இடத்தில் உள்ளது

சிறப்பான இடத்தில் உள்ளது

இந்த நிலையில் இந்தியாவின் இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பான இடத்தில் உள்ளது, இந்தியா Closed பொருளாதாரமோ வர்த்தகச் சந்தையோ இல்லை. இதனால் இந்த உலகளாவிய வர்த்தகம் பெரும் பாதிப்பைக் கட்டாயம் ஏற்படுத்தும் என மத்திய நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 இந்தியா

இந்தியா

இந்தியா 2008 சர்வதேச நிதி நெருக்கடி, 2000 டாட் காம் பபுள், பல போர்களை எதிர்கொண்ட போதும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 79 ரூபாய் வரையில் சரிந்தது இல்லை, ஆனால் தற்போது ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் எவ்விதமான நேரடி பாதிப்பு இல்லாத போதே இந்தியா ரூபாயின் மதிப்பும் முதலீட்டுச் சந்தையும் மோசமான நிலையை அடைந்து வருவது தான் தற்போது அனைத்துத் தரப்பின் முக்கியக் கேள்வியாக உள்ளது.

பொம்மை வாங்கலையோ.. பொம்மை..!! முகேஷ் அம்பானி புதிய டீல்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rupee reaches 78.98 against US dollar; Rupee Better Placed Than Others Says Finance Minister

Rupee reaches 78.98 against US dollar; Rupee Better Placed Than Others Says Finance Minister வரலாற்றுச் சரிவில் ரூபாய் மதிப்பு.. ‘பட்’ நிர்மலா சீதாராமன் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்க..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.