பிரித்தானியாவில் தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொன்று ஆற்றில் வீசிய 14 வயது சிறுவனின் புகைப்படம் மற்றும் அடையாளம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸில் உள்ள சர்னில் உள்ள ஓக்மோர் நதியில் அதிவேக கார் விபத்தில் ஏற்பட்ட காயங்களுடன் 5 வயது சிறுவனான லோகன் முவாங்கி (Logan Mwangi) இறந்து கிடந்தார்.
விசாரணைக்கு பின் சிறுவன் கொலை செய்யப்பட்டு நதியில் வீசப்பட்டான் என்றும், அவனைக் கொன்றது அவரது தாய் அங்காராட் வில்லியம்சன் (Angharad Williamson), 31 மற்றும் மாற்றாந்தந்தை ஜான் கோல் (John Cole), 40, என தெரிய வந்தது.
தொடர்புடைய செய்தி: நதிகரையில் ஒதுங்கிய 5 வயது சிறுவன் உடல்: பிரித்தானிய தாயின் கொடூர செயல்!
ஆனால் மேற்பட்ட விசாரணையில், இந்தக்கொலை ற்கு முக்கிய உடந்தை ஜான் கோலின் 14 வயது மகன் கிரேக் முல்லிகன் (Craig Mulligan) என்பது உறுதியானது.
ஆனால், முல்லிகன் கோல் வயது காரணமாக அவரது அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது.
தற்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு தண்டனையும் வசங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வயது காரணமாக அவரது விவரங்கள் வெளியிடப்படக்கூடாது என்பதற்கான தடையை நீதிமன்றம் நீக்கியது. இந்நிலையில், முல்லிகன் கோலின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லண்டனில் இலங்கை தமிழருக்கு நடிகர் அஜித்குமார் தந்த சர்ப்ரைஸ்.. நெகிழ்ச்சி வீடியோ
இந்த வழக்கில், குற்றங்கள் நிரூப்பிக்கப்பட்டு மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், ஜான் கோலுக்கு 29 ஆண்டுகளும், உயிரிழந்த சிறுவனின் தாய் அங்காராட் வில்லியம்சனுக்கு 28 ஆண்டுகளும், கிரேக் முல்லிகனுக்கு குறைந்தது 15 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.