பங்குச்சந்தை சரிவு! ஜூன் மாதத்தில் ரூ.14 லட்சம் கோடி இழப்பு! என்ன காரணம்?

ஜூன் மாதத்தில் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் சுமார் 2300 புள்ளிகள் வரை சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஜூன் 30-ம் தேதி முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.14 லட்சம் கோடி குறைந்து 243 கோடி ரூபாயாக இருக்கிறது. சென்செக்ஸ் 52 வார குறைந்தபட்ச புள்ளியை இந்த மாதத்தில் தொட்டது.
BSE gets Sebi's in-principle nod to introduce EGR | Mint
ஏப்ரல் மே மற்றும் ஜுன் காலாண்டில் மொத்தமாக 9.5 சதவீதம் அளவுக்கு பங்குச்சந்தை சரிந்தது. இந்த காலாண்டில் மெட்டல் குறியீடு அதிகபட்சமாக 27 சதவீதம் அளவுக்கு சரிந்தது. ஜூன் மாதத்தில் மட்டும் மெட்டல் குறியீடு 12 சதவீதம் அளவுக்கு சரிந்தது. ஆட்டோ குறியீடு அதிகமாக 11 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. தவிர ஜூன் மாதத்தில் ஆட்டோ குறியீடு மட்டுமே 2 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது முடிந்தது. மற்ற அனைத்து குறியீடுகளும் சரிந்தே முடிவடைந்தன.
Sensex tanks 2400 points, RIL logs worst fall in 10 years
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 பங்குகளில் 11 பங்குகள் மட்டுமே ஜூன் மாதத்தில் உயர்ந்த்து முடிந்தன. மற்ற அனைத்து பங்குகள் சரிவையே சந்தித்தன. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது, ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து நீடிக்கும் போர் ஆகிய காரணங்களால் அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள். தொடர்ந்து 9வது மாதமாக அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறி வருகிறார்கள். இது பங்குச் சந்தை சரிவுக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
– வாசு கார்த்திSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.