ப்ராக்,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து ரஷிய நிலக்கரியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யதது. இதன் காரணமாக செக் குடியரசு நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முன்தாக, செக் குடியரசு தனது நிலக்கரி சுரங்கங்களில் பணியை நிறுத்தி வைக்க திட்டிமிட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் அந்த சுரங்கங்களில் மீண்டும் பணியை தொடர அந்நாடு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் நிதி மந்திரி தெரிவிக்கையில், நாட்டின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வரும் அரசிற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தின் பணிகளை அடுத்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட உள்ளது. மேலும், வருகிற 2025 -ம் ஆண்டு வரை இதனை நீட்டிப்பதற்கான பகுப்பாய்வு செய்யப்படும். இந்த ஆண்டு அந்த சுரங்கத்தில் பணிகளை நிறுத்தப்பட வேண்டும் என திட்டமிட்டிருந்தது. ஆனால் நிலக்கரிக்கான தேவை அதிகரித்துள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
செக் நிறுவனமானது, 2023-ம் ஆண்டில் சுமார் 1.3 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியை வெட்டி எடுக்க திட்டமிட்டிருந்தது. நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. என நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்தார்.
செக் குடியரசு நாடானது, 2023-ம் ஆண்டிற்குள் நிலக்கரி உற்பத்தியை படிப்படியாக நிறுத்துவதை தனது நோக்கமாக கொண்டிருந்தது. அதே நேரத்தில் நாட்டில் அணுசக்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.