உக்ரைனைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காலில் கட்டு போட்டுக்கொண்டு தனது தேசிய கீதத்தைப் பாடுவதைக் காட்டும் இதயத்தை உருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
இந்த பதிவை உக்ரைனின் உள்நாட்டு விவகார அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ (Anton Gerashchenko) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், “உடைக்க முடியாதது… உக்ரைன். கட்டு போடும்போது உக்ரேனிய கீதத்தைப் பாடும் சிறுமி” என கூறியுள்ளார். மேலும், அந்த வீடியோவை விக்டர் பஷுலா (Viktor Pashula) என்பவர் படம் பிடித்துள்ளார் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Unbreakable…🇺🇦
A little girl sings Ukrainian anthem while she getting her bandages.
📹: Viktor Pashula#UkraineRussiaWar #russiaisaterrorisstate #StopRussia pic.twitter.com/BBvlxWmcIp
— Anton Gerashchenko (@Gerashchenko_en) June 29, 2022
வைரலாகிவரும் இந்த வீடியோவில், சிறுமி ‘ஷ்சே நீ வ்மெர்லா உக்ரைனா’ என்று மழலைக் குரலில் பாடுவதைக் கேட்கலாம், அதாவது “உக்ரைன் இன்னும் அழியவில்லை” என்று பொருள்.
சிறுமியின் காயங்களுக்கான காரணம் தெரியவில்லை. மருத்துவமனை படுக்கையில் செவிலியர்கள் தன் காலில் கட்டு போட்டுக் கொண்டிருக்கும் போது, அவர்களுடன் சேர்ந்து பாடிக்கொண்டே சிரிக்கிறார்.
வியாழனன்று பதிவிடப்பட்ட இந்த வீடியோ 1.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 12,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும் இது 2,300 முறைக்கு மேல் ரீ-ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு: 4 ஆண்டுகளுக்குள் நடக்கவுள்ள 5-வது தேர்தல்!