மோடி துவக்கி வைத்த புதிய திட்டம்.. MSME நிறுவனங்களுக்குப் பல நன்மைகள்..!

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ‘எம்எஸ்எம்இ செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல்’ என்னும் RAMP திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இத்திட்டம் சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த உள்ளதாகத் தெரிகிறது.

பொதுத்துறை வங்கிகளை மொத்தமாக கைகழுவ மோடி அரசு திட்டம்..? வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி..!

MSME நிறுவனங்கள்

MSME நிறுவனங்கள்

தற்போதுள்ள MSME திட்டங்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு மாநிலங்களில் இருக்கும் நடுத்தரச் சிறு மற்றும் குறு நிறுவனங்களின் (MSME) செயல்படுத்தும் திறனை அதிகரிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த Raising and Accelerating MSME Performance என்ற RAMP திட்டத்தை மத்திய அரசு துவக்கி வைத்துள்ளது.

ஆத்மநிர்பர் பாரத் அபியான்

ஆத்மநிர்பர் பாரத் அபியான்

இது ஆத்மநிர்பர் பாரத் அபியான் திட்டத்தில் புதுமைகளை ஊக்குவித்தல், எண்ணத்தை ஊக்குவித்தல், புதிய வணிகம் மற்றும் தொழில்முனைவோரைத் தரமான தரங்களை மூலம் மேம்படுத்துதல், செயல்முறைகளை மேம்படுத்துதல், சந்தை அணுகலை மேம்படுத்துதல், தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துதல் மற்றும் தொழில்துறை 4.0 ஆகியவற்றை MSMEகளைச் சுய-போட்டியாக மாற்ற இந்த RAMP திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியத் திட்டங்கள்
 

முக்கியத் திட்டங்கள்

நரேந்திர மோடி இன்று RAMP திட்டத்துடன் ‘முதல் முறை MSME ஏற்றுமதியாளர்களின் திறனை உருவாக்குதல்’ திட்டம் மற்றும் ‘பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில்’ (PMEG) புதிய அம்சங்களையும் துவக்கி வைத்தார். இந்த PMEG திட்ட முயற்சிகளுக்கு உற்பத்தி துறைக்கு 50 லட்சமும், சேவை துறைக்கு 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கவனிக்க வேண்டியவை

கவனிக்க வேண்டியவை

இன்று மோடி துவங்கி வைத்த திட்டத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்ப்போம்.

6,000 கோடி மதிப்பிலான ‘எம்எஸ்எம்இ செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல்’ (RAMP) திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

MSME ஏற்றுமதியாளர்கள்

MSME ஏற்றுமதியாளர்கள்

தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ‘முதல் முறை MSME ஏற்றுமதியாளர்களின் திறன் உருவாக்கம் (CBFTE)’ திட்டத்தையும் அவர் தொடங்கினார்.

பட்ஜெட்

பட்ஜெட்

MSME துறையை வலுப்படுத்துவதற்காகக் கடந்த 8 ஆண்டுகளில் 650 சதவீதத்திற்கும் அதிகமான பட்ஜெட்டை தனது அரசு உயர்த்தியுள்ளது என்றார் மோடி கூறியுள்ளார்.

கொள்கை மாற்றங்கள்

கொள்கை மாற்றங்கள்

MSME துறையை ஊக்குவிக்க அரசாங்கம் தேவையான கொள்கை மாற்றங்களைச் செய்து வருகிறது, அரசாங்கத்திற்குப் பொருட்களை வழங்குவதற்காக MSME களை GeM போர்ட்டலில் பதிவு செய்யுமாறு பிரதமர் MSME கேட்டுக் கொண்டார்.

காதி விற்பனை

காதி விற்பனை

காதி (பருத்தி) விற்பனை கடந்த எட்டு ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

மோடி-யை சந்தித்த கையோடு.. தமிழ்நாடு அதிகாரிகள் உடன்.. பாக்ஸ்கான் யங் லியு மாஸ்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: narendra modi msme மோடி

English summary

PM Modi inaugurates ‘Raising & Accelerating MSME Performance’ scheme what are benefits- Full details

PM Modi inaugurates ‘Raising & Accelerating MSME Performance’ scheme what are benefits- Full details மோடி துவக்கி வைத்த புதிய திட்டம்.. MSME நிறுவனங்களுக்குப் பல நன்மைகள்..!

Story first published: Thursday, June 30, 2022, 18:36 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.