மும்பை : மஹாராஷ்டிராவில் தாய், மகள் கொலை செய்யப்பட்டனர். மற்றொரு மகள் மற்றும் அந்த வீட்டின் டிரைவர் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
மஹா., தலைநகர் மும்பையின் புறநகரான கண்டிவிலியில் உள்ள ஒரு வீட்டில் வசித்த கிரண் தல்வி,45, அவரது மகள் முஸ்கன்,26, இருவரும் ஒரு அறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். கிரணின் மற்றொரு மகள் பூமி, 17, மற்றும் அவர்கள் வீட்டின் டிரைவர் ஷிவ்தயாள் சென்,60, இருவரும் மற்றொரு அறையில் தூக்கிட்டு இறந்து கிடந்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷிவ்தயாள் அந்த வீட்டில் 10 ஆண்டுகளாக டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக ஷிவ்தயாளும், பூமியும் சேர்ந்து கிரண் மற்றும் முஸ்கனை கொலை செய்துள்ளனர். பின், இருவரும் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கடிதத்தை கைப்பற்றியுள்ள போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மும்பை : மஹாராஷ்டிராவில் தாய், மகள் கொலை செய்யப்பட்டனர். மற்றொரு மகள் மற்றும் அந்த வீட்டின் டிரைவர் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.மஹா., தலைநகர் மும்பையின் புறநகரான கண்டிவிலியில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.