வெந்தயத்தின் மகிமை மற்றும் நன்மை நமக்கு நன்கு தெரிந்ததுதான். ஆனால் வெந்தயத்தின் கசப்பான சுவை அதை நேரடியாக சாப்பிட முடியாமல் தடுக்கிறது. இதனால் உணவில் தாளித்து கொட்டியும், மாவில் அரைத்து சேர்ப்போம். இதுவே இதற்கு தீர்வாக பாசி பயறை முளைவிட்டு சாப்பிடுவதுபோல, வெந்தயத்தை முளைவிட்டு சாப்பிட்டால் அதிக நன்மை கிடைக்கும். அதன் கசப்புத் தன்மை நீங்கும்.
முளைவிட்ட பிறகு வெந்தயம் மெரதுவாக மாறும், அதனால் ஜீரணமாகும். இதில் அதிக ஆண்டி ஆக்ஸிடண்ட் இருபப்தால் உடலில் நோய் எதிர்பு சக்தியை அதிகப்படுகிறது.
மேலும் முளைவிட்ட வெந்தயம் நமது ரத்ததில் குறைந்த அளவில் குளுக்கோஸ் கலக்க உதவிடுகிறது. ரத்தத்தில் அதிக சக்கரை அளவு உயராமல் இருக்கும்.
முளைவிட்ட வெந்தயம் தயார் செய்வது எப்படி
4 முதல் 5 முறை வெந்தயத்தை தண்ணீரில் கழுவவும். தண்ணீரில் இந்த விதைகளை போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். தண்ணீரை வடிகட்டிய பிறகு ஒரு வெள்ளை துணியில் இந்த விதைகளை போட்டு கட்டி வைக்கவும். அடுத்த நாள் துணையிலிருந்து வெந்தயத்தை எடுத்து மீண்டும் கழுவி, திருப்பியும் அதே துணியில் வைக்கவும். இதுபோல் 5 நாட்கள் செய்யவும். தற்போது சிறிய இலைகள் துளிர்விடத் தொடங்கும். நீங்கள் இதை ஏசியில் வைத்தால், ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும். இதை வைத்து சாலட், சேட் ஐடம்கள் செய்து சாப்பிடலாம்.