டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!

இந்திய ரயில் சேவையில் உணவு மற்றும் சுற்றுலா சேவைகளை வழங்கும் IRCTC-யின் சேவை குறித்தும், அதன் விலைப்பட்டியல் குறித்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.
ஆனால் ஐ.ஆர்.சி.டியின் சேவை குறித்து எத்தனையோ புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும் அதன் மீது எந்த தீர்வும் காணப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டு வருவதும் வழக்காகி இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அந்த வகையில், சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ஒரு கப் டீ வாங்கியதற்கு IRCTC சார்பில் 70 ரூபாய்க்கு ரசீதை நீட்டியிருந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
image
போபாலில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் சதாப்தி ரயிலில் கடந்த ஜூன் 28ம் தேதி பயணித்த பயணி ஒருவர் ரயிலில் டீ வாங்கியிருக்கிறார். அந்த தேநீரின் விலை என்னவோ வெறும் 20 ரூபாய்தான். ஆனால் அதற்காக விதிக்கப்பட்ட சேவைவரி (service charge) 50 ரூபாய் என ரயில்வே ஊழியர் கொடுத்த ரசீதில் குறிப்பிட்டுள்ளதை கண்டு அந்த பயணி அதிர்ச்சியுற்றிருக்கிறார்.
இதனையடுத்து அந்த பயணி டீக்கான ரசீதை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து, “ரூ.20க்கான டீக்கு 50 ரூபாய்க்கு வரி விதிக்கிறார்கள். அற்புதமான கொள்ளையாக இருக்கிறதே” என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு நெட்டிசன்களிடையே வைரலாகி IRCTCக்கு தத்தம் புகார்களையும் முன்வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், டீக்கு 70 ரூபாய் பில் கொடுத்ததற்கான காரணத்தை ரயில்வே நிர்வாகம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது
image
அதில், “2018ம் ஆண்டு விடுக்கப்பட்ட சுற்றறிக்கையின்படி, ராஜ்தானி அல்லது சதாப்தி ரயில்களில் பயணிக்கும் பயணிகள் முன்பே உணவுகளை முன்பதிவு செய்யாமல் பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்தால் அதற்காக 50 ரூபாய் சேவை கட்டணம் செலுத்த வேண்டும். அது ஒரு கப் டீ அல்லது காபிக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், சதாப்தி, ராஜ்தானி ரயில்களில் முதலில் கட்டாய தேர்வாக இருந்த இந்த அறிவிப்பு பின்னர் விருப்ப தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, பயணிகள் விருப்பப்பட்டால் ரயிலில் உணவுகளை வாங்க மறுத்து, டிக்கெட்டுக்கு மட்டும் பணம் செலுத்திக்கொள்ளல்லாம்.” என தெரிவிகப்பட்டுள்ளது.
ALSO READ: 
ரூ.2.64 கோடி ஹவாலா பணம்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக இதுவரை பிடிபட்ட பணம்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.