தமிழகத்தில் அதிகரித்து வரும்கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.