துருக்கியை சேர்ந்த ஒருவரின் வயிற்றில் இருந்த 233 பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
துருக்கியை சேர்ந்த ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது சகோதரர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு எண்டோஸ்கோபி, எக்ஸ்ரே எடுக்கசொல்லியுள்ளனர்.
அவரும் எண்டோஸ்கோபி, எக்ஸ்ரே எடுத்து அவற்றை மருத்துவரிடம் காட்டியுள்ளார். இதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அவரது வயிற்றில், பேட்டரிகள், காந்தம், நகங்கள், கண்ணாடி துண்டுகள், ஸ்க்ரூஸ், கற்கள் என 233 பொருட்கள் இருந்தன.
இது குறித்து மருத்துவர்கள் அவரிடம் கேட்டதற்கு, சரியாக பதில் கூற மறுத்துள்ளார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்த பொருள்களை அகற்றியுள்ளனர்.
இந்த அறுவை சிகிக்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சையின்போது ஒன்றிரண்டு பொருள்கள் வயிற்றுச் சுவரில் துளைத்திருந்தது. அதேபோல பெருங்குடல் பகுதியில் இரண்டு உலோகத் துண்டுகள் இரண்டு கற்கள் இருந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
newstm.in