பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை பினாமி பெயரில் சசிகலா வாங்கியிருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து 15 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்தை முடக்கி வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.