பெட்ரோல் – டீசல் விலை
சென்னையில் 40 -வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் எந்த மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பான் – ஆதார் இணைக்காவிடில் இன்று முதல் அபராதம்
பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் இன்று முதல் ₨1,000 அபராதம் வசூலிக்கப்படும். பான், ஆதார் எண்களை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிகப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா – அவசர ஆலோசனை
தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு சென்றுகொண்டு இருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.
வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு
வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைந்து ₨2,186க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ரூ. 1018.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ட்விட்டர் பக்கத்தில் தனது அதிமுக பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி . அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு இருந்ததை தலைமை நிலைய செயலாளர் என மாற்றியுள்ளர் இபிஎஸ்.
காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் நடமாடும் மருத்துவ வாகனங்கள். சென்னை, நொச்சிக்குப்பத்தில் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் . காசநோய் இல்லா தமிழ்நாடு-2025 என்ற இலக்கை எட்ட அரசின் சிறப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. காசநோய் கண்டறியும் டிஜிட்டல் ஆம்புலன்ஸ் சேவை ரூ. 10.65 கோடி மதிப்பிலான 23 ஆம்புலன்ஸ்கள் இயக்க திட்டம் . கிராமங்களில் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று காசநோய் கண்டறிய இத்திட்டம் உதவுகிறது.
கேரளா, திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை . பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.