நாட்டுமக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்பு கோர வேண்டும்… உச்சநீதிமன்றம் அதிரடி

முகமது நபி குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு நுபுர் ஷர்மா மன்னிப்பு கோருவதாவும், தமது கருத்துக்களை அவர் திரும்ப பெறுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜரான நுபுர் ஷர்மாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தொலைக்காட்சியில் தோன்றி நுபுர் ஷர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று உத்தரவிட்டது.  நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்துகள் ஏற்புடையது அல்ல என்றும் இதுபோன்ற விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த என்ன அவசியம் ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பியது.

இதற்கிடையே, தன்மீதான வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று நுபுர் ஷர்மா விடுத்த கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.