ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இதன் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து வந்தவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க!
இந்த நிலையில் பிளாஸ்டிக் தடை காரணமாக காகித உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்து உள்ளதாக கருதப்படுகிறது.
பிளாஸ்டிக் தடை
ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ளது. இந்த செய்தி பிளாஸ்டிக் நிறுவனங்களுக்கு ஒரு மோசமான செய்தியாக இருந்தாலும் காகித தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது ஒரு ஜாக்பாட் செய்தியாகும்.
பங்குகள் உயர்வு
அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் காகிதப் பொருட்களாக மாற்றப்படும் என்பதால் காகித தொழிற்சாலைகளின் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேகே பேப்பர் 7 சதவீதம், ஆந்திரா தாள் 7 சதவீதம், வெஸ்ட் கோஸ்ட் பேப்பர் 13 சதவீதம், தமிழ் செய்தித்தாள் 16 சதவீதம், சத்யா இண்டஸ்ட்ரீஸ் 12 சதவீதம், இமாமி பேப்பர்: 10 சதவீதம் என உயர்ந்துள்ளது.
சவால்கள்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக காகித பொருட்களை தயாரித்து கொடுக்கும் பணி மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தாலும் இதிலும் சில சவால்களை சந்திக்க வேண்டிய நிலையில் இருப்பதாக காகித பொருட்களை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலப்பொருட்கள் விலை உயர்வு
காகித பொருட்களின் தேவை தற்போது அதிகரித்துள்ளதால் காகித ஆலைகளுக்கான மூலப்பொருள் விலை உயரும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக காகிதக்கூழ், ரசாயனங்கள், நிலக்கரி, எண்ணெய் மற்றும் சரக்கு விலைகள் போன்ற முக்கிய மூலப் பொருட்களின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் இந்த அதிகரிப்பு மேலும் தொடரும் என்றும் கூறப்படுகிறது.
காகிதக்கூழ்
தற்போது காகிதகூழ் விலை ஒரு டன்னுக்கு $950 ஆக உள்ளது. ஆனால் இதன் விலை ஒரு டன்னுக்கு குறைந்தபட்சம் $1,000 ஆக விலை உயர வாய்ப்பு இருப்பதாக ஜேகே பேப்பரின் மேத்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அதேபோல் நிலக்கரி விலைகள் மே மாதத்தில் ஒரு டன் ஒன்றுக்கு $435 என உயர்ந்துள்ளதாகவும் இது சராசரி உயர்வை விட மிக அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
10,000 கோடி
ஆனால் அதே நேரத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தொழில்துறையின் மதிப்பு 10 ஆயிரம் கோடியாக இருந்து வந்தது என்றும், இந்தியா முழுவதும் ஒரு ஆண்டுக்கு 6 பில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி ஆனது என்றும், தடை காரணமாக இவை அனைத்தும் தற்போது காகிதமாக மாற்றப்படுவதல் 10 ஆயிரம் கோடி வர்த்தகம் இனி காகிதத்தை நோக்கி திரும்பும் என்றும் கூறப்படுகிறது.
தேவை அதிகரிப்பு
இதுகுறித்து ஜேகே பேப்பரின் தலைவரும் இயக்குனருமான ஏ.எஸ்.மேத்தா கூறுகையில், ‘ஏற்கனவே பேப்பர் ஸ்ட்ரா மற்றும் பேப்பர் கப் உள்ளிட்ட பல காகித அடிப்படையிலான பொருட்களை அதிகளவில் தயாரித்து வருகிறோம் என்றும், தேவை அதிகமாக இருப்பதால் தயாரிப்பும் அதிகமாகி உள்ளதாகவும், காகித பொருட்களின் உற்பத்தில் ஒரு கணிசமான அளவை நோக்கி நகர தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சாதகமான செய்தி
இதுகுறித்து ஆஷிகா குழுமத்தின் சில்லறை வணிகத்தின் ஆராய்ச்சித் தலைவர் அரிஜித் மலகர் அவர்கள் கூறியபோது, ‘பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை காகிதத் தொழிலுக்கு சாதகமான செய்தியாக உள்ளது என்றும், ஏனெனில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை காகித பொருட்களாக மாற்றுவதற்கான வாய்ப்பு மிகப்பெரியது என்றும் தெரிவித்தார். இருப்பினும், தற்போது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுவதுமாக காகிதமாக மாற்றுவதற்கான உள்கட்டமைப்பில் இந்தியா பின்தங்கியுள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.
Plastic ban in India may have opened a gold mine for paper industries!
Plastic ban in India may have opened a gold mine for paper industries! | பிளாஸ்டிக் தடையால் அடித்தது ஜாக்பாட்: ஆனால் காத்திருக்கும் மிகப்பெரிய சவால்!