தமிழ்நாட்டில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொசுகு கப்பல் திட்டம் சென்னையில் சமீபத்தில் தொடங்கப்பட்டது. கார்டிலியா’ என்ற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துகிறது.
சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வரையில் 2 நாள் சுற்றுலா திட்டம் மற்றும் சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரிக்கு சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலாத் திட்டம் என இரண்டு பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்படுகிறது.
சமீபத்தில் விஜே மணிமேகலை, ஷிவாங்கி, ஸ்ரூதிகா ஆகியோர் இந்த சொகுசு கப்பலில் பயணம் செய்த வீடியோவை யூடியூபில் பகிர்ந்தனர். அது பயங்கர வைரலானது.
இந்நிலையில் இப்போது, நடிகை பவித்ரா ஜனனியும் இந்த கப்பலில் சுற்றுலா சென்ற படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இங்கே பாருங்க!
தற்போது பவித்ரா, தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார்.
அதில் இவருக்கு ஜோடியாக சுந்தரி நீயும், சுந்தரன் நானும் சீரியல் புகழ் வினோத்பாபு நடிக்கிறார்.
விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
குறிப்பாக சினிமாவுக்கு எந்த வகையிலும், குறையாமல் சீன்கள் இருப்பதால்’ ரசிகர்கள் இந்த சீரியலை மிகவும் பாராட்டி கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர்.
என்ன! நீங்களும் சொகுசு கப்பல்ல டூர் போக ரெடி ஆகிட்டீங்களா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“