விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று தொடங்கியுள்ளது. பாசஞ்சர் ரயில் இரண்டரை வருடங்களுக்கு பிறகு விரைவு ரயிலாக மாற்றப்பட்டு திருப்பதிக்கு இன்று மாலை புறப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக இரவு 11 மணிக்கு விரைவு ரயில் திருப்பதி சென்றடைகிறது.