நிதி அமைச்சின் கீழ் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம், 100,000 மெட்ரிக் டொன் LP எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் நேற்று (30) கைச்சாத்திட்டுள்ளது.
இவற்றிற்கான மொத்த விலை 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள். உலக வங்கி 70 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதுடன், மீதி 20 மில்லியன் டொலர்களையும் லிட்ரோ நிறுவனம் வழங்கியுள்ளது.
இவ்வாறு கொள்வளவு செய்கின்ற இந்த எரிவாயு சிலிண்டர்கள் நான்கு மாதங்களுக்கு நாட்டில் விநியோகிக்க போதுமானதாக இருக்கும்.
இவற்றில் 70% எரிவாயு வீட்டுப் பாவனையாளர்களுக்கு விநியோகிக்கப்படும். இவற்றில் 5 மில்லியன் சிலிண்டர்கள் 12.5 கிலோ கிராம் நிறையுடையவை. 1 மில்லியன் சிலிண்டர்கள் 5 கிலோ கிராம் நிறையுடையவை மற்றும் 1 மில்லியன் சிலிண்டர்கள் 2.5 கிலோ கிராம் நிறையுடையவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 30% வர்த்தகப் பயன்பாட்டிற்காகவும் விநியோகிக்கப்பட உள்ளன.
லிட்ரோ நிறுவனத்தினால் 20 மில்லியன் டொலர்கள் செலவில் கொள்வனவு செய்யப்படவுள்ள 33,000 டொன் LPG ஆரம்ப கட்டமாக ,இம் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்தடையும் என்பதுடன். அதன் விநியோக நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும்.