தமிழகத்தில் முதல் கட்டமாக, சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கே.எப்.டபிள்யூ வங்கி நிதி உதவியின் கீழ் சென்னையில் மொத்தம் 500 மின்சாரப் பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
500 பேருந்துகளையும் 2024-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இ-பஸ்களின் முக்கிய அம்சங்கள்:
> இந்த மின்சார பேருந்துகள் அனைத்தும் 3300 மிமீ அகலமும், 12 ஆயிரம் மிமீ உயரமும் இருக்கும்.
> இந்தப் பேருந்தின் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
> வேகக் கட்டுப்பாடு இல்லாமல் மணிக்கு 80 கிலோ மீட்டர் வரை செல்ல முடியும்.
> மின்சாரப் பேருந்துகள் முழுவதும் ஏசி வசதி கொண்டதாக இருக்கும்.
> 25 டிகிரி செஸ்சியஸ் வரை இந்தப் பேருந்துகளில் ஏசி வசதி செய்யப்பட்டு இருக்கும்.
> இருக்கை வசதிகளை பொறுத்த வரையில் ஒரே நேரத்தில் 35 பேர் அமரும் வகையில் இந்தப் பேருந்துகள் இருக்கும். 35 பேர் நின்று கொண்டு பயணம் செய்யலாம்.
> இதைத் தவிர்த்து மாற்றுத்திறனாளிகள் வீல் சேர் நிறுத்தும் அளவுக்கு ஓர் இடம் இருக்கும். மாற்றுதிறனாளிகளுக்கு ஏற்ற வகையில் இந்த பேருந்துகள் இருக்க வேண்டும் என்பது முக்கிய அம்சமாக உள்ளது.
> ஒரு பேருந்தை 60 முதல் 120 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இதற்கான சார்ஜிங் வசதி பணிமனைகளில் அமைக்கப்படும். இதைத் தவிர்த்து பேருந்து நிலையங்களிலும் சார்ஜிங் வசதி இருக்கும். இந்த நேரத்தில் 10 முதல் 30 நிமிடம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
> தினசிரி 250 முதல் 350 கிலோ மீட்டர் தூரம் இந்தப் பேருந்துகள் இயங்கும். இந்த அளவிலான பேட்டரிகள் இந்தப் பேருந்துகள் பயன்படுத்தப்படும். இதற்கு ஏற்ற வகையில் சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்படும். இந்த வசதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் செய்து தரும்.
இந்த வசதிகளுடன் முதல் கட்டமாக 100 மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் குறிப்பட்ட காலத்திற்குள் இறுதி செய்யப்பட்டால் 3 முதல் 6 மாத காலத்தில் சென்னையில் சாலைகளில் மின்சார பேருந்துகள் ஓட வாய்ப்புள்ளது.
> இது, ‘இந்து தமிழ் திசை’ ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்